தமிழ் புதையல்
வெள்ளி, 30 ஜனவரி, 2009
விரும்பாத போரின் வேண்டாத நினைவுகள் -கர்னல் ஹரிஹரன்
"இவர்தான் நமது மகனைக் கொன்ற ராணுவ அதிகாரி." என்று என்னை சுட்டிக்காட்டி தன்னுடைய மனைவிக்கு அந்த நடுத்தர வயது மனிதர் அறிமுகப்படுத்தினார். என்னுடன் இருந்த என் மனைவியோ அதிர்ச்சியடைந்தார். ஆனால் அந்த மனிதரின் வலியை அறிந்திருந்த நான், அமைதியாக இருந்தேன். 1989&ல் சென்னையில் என் வீட்டில் நடந்த சம்பவம் இது. அந்த தம்பதியினரை யாழ்ப்பாணத்தில் இருந்தபோது எனக்கு நன்றாகத் தெரியும். ஆகஸ்டு 5, 1987&ல் நான் இந்திய அமைதிப்படையின் சார்பாக யாழ்ப்பாணத்தின் செம்மண்ணில் காலடி வைத்தபோது, அவர்கள் வீட்டுக்குத்தான் முதலில் சென்றேன். அவருடைய 18 வயது மகனும் அங்கிருந்தான். அந்த அழகான இளைஞன் விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்தவன். யாழ்ப்பாணத்தில் அவர்களை 'பொடியன்கள்' என்று அழைப்பார்கள்.
சில மாதங்கள் கழித்து எதிர்பாராதவிதமாக புலிகளுடன் போர் தொடங்கியது. அந்தப் பொடியன் எங்கள் படையுடன் போரிட மன்னாருக்குச் சென்றுவிட்டதாக அறிந்தேன். எனவே நான் படையினரிடம் அந்த இளைஞனை உயிரோடு பிடியுங்கள்; சுட்டுவிடாதீர்கள் என்று கூறியிருந்தேன். "அவன் சயனைடு குப்பியைக் கடித்து இறந்துவிடலாம். அதற்கு இடம்கொடுக்காதீர்கள்" என்றும் எச்சரித்திருந்தேன். ஆனால் அது நடந்ததென்னவோ வேறு.
தாக்குதலின்போது நமது படையினர் அவனை அணுகுவதற்கு முன்பே, அவன் சயனைடு குப்பியைக் கடித்து இறந்துபோய்விட்டான். இச்சம்பவத்தை துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அவனது தந்தையிடம் நான் எப்படி விவரிப்பது? இலங்கையில் ராணுவ உளவுப்பிரிவு தலைவராக மூன்று ஆண்டுகள் நான் இருந்தபோது, கண்ட நூற்றுக்கணக்கான சம்பவங்களில் அந்த இளைஞனின் மரணமும் ஒன்று. அவையெல்லாம் என்னை துயரடையச் செய்தன.
ஒரு தமிழனான எனக்கு தொழில்ரீதியாக அங்கு பணிபுரிவது எளிதாக இருந்தது. ஆனால் போரில் அப்பாவித் தமிழர்கள் சாவதை தினமும் பார்ப்பது உளரீதியாக, பெரும் சித்திரவதையாக இருந்தது. அந்தத் துயரான அனுபவங்கள் எனக்குள் ஆழமான காயங்களை ஏற்படுத்தின. தமிழர்கள் பெரும்பான்மை சிங்களர்களுக்கு எதிராக தங்கள் உரிமைகளைப் பெற நடத்திவரும் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன். ஆனால் ஆயுதம் ஏந்திப் போராடுவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
இலங்கைக்கு நான் இந்திய ராணுவத்துடன் சென்றது எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவம். அந்த காலகட்டத்தில் உளவுத்துறையில் இருந்த தமிழ் அதிகாரிகளில் நான்தான் சீனியர் என்பதால் அனுப்பப்பட்டேன். என்னுடைய உறவினர் சிலர் யாழ்ப்பாணத்திலும் கொழும்புவிலும் இருந்து வந்தவர்கள். எனவே தமிழர் பிரச்னையைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
இந்திய - இலங்கை ஒப்பந்தம் அவசரத்தில் உருவாக்கப்பட்டு, நீண்டகால குறிக்கோள் இல்லாமல் செயல்படுத்தப்பட்டது. அதற்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்தன. அவை: இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைக் காப்பது, அத்துடன் இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளை அந்நாட்டு ஒருமைப்பாட்டிற்கு கேடு நேராத வகையில் பெற்றுத்தருவது. இவை அரசியல்ரீதியான, ராஜதந்திரரீதியான குறிக்கோள்கள். அவற்றுக்கு ராணுவப் பின்னணி கிடையாது. இந்திய அமைதிப்படைக்கு எழுத்துமூலமாக எந்தவிதமான ஆணையும் அரசால் வழங்கப்படவில்லை. வந்த உத்தரவுகளும் வாய்வழியாகவே வந்தன. அவற்றில் சில உத்தரவுகள் நமது குறிக்கோள்களையும் மீறி இருந்தன. அதில் ஒன்று, இந்த ஒப்பந்தத்தை விரும்பாத சிங்களர்கள் மற்றும் இலங்கை ராணுவத்திடமிருந்து எதிர்ப்பு வந்தால் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனவைப் பாதுகாப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்பது!
ஆகஸ்டு 2, 1987-ல் சென்னைக்கு நான் வந்தபோது, தென்பிராந்திய கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் தீபிந்தர் சிங், இந்தியப் படையினரோடு இலங்கை செல்வதற்கு தயாராக இருக்குமாறு என்னிடம் கூறினார். தமிழ்ப் போராளிகளிடமிருந்து ஆயுதங்களைத் திரும்பப்பெற இந்தியப் படையினரின் உதவியை இலங்கை நாடியிருந்தது. "அங்கு நீங்கள் மூன்று நாட்களுக்கு இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். சரியாக தெரியவில்லை. குறிப்பாக என்ன செய்யவேண்டும் என்ற விவரங்கள் எதுவும் வரவில்லை. மற்றவர்களைப் போலவே பிரபாகரனும் ஆயுதங்களை ஒப்படைப்பார் என்று நினைக்கிறேன்" என்று அவர் கூறினார்.
மூன்று நாள் கழித்து இரண்டே இரண்டு யூனிபார்ம்களுடன் நான் யாழ்ப்பாணம் போய்ச் சேர்ந்தேன். ஜெனரல் தீபிந்தர் சிங்கின் இரண்டு எதிர்பார்ப்புகளுமே பொய்த்துவிட்டன. பிரபாகரன் ஒப்பந்தத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் சுதந்தர தமிழ் ஈழத்தை உருவாக்கும் குறிக்கோளையும் கைவிடவில்லை. நானோ இந்தியாவுக்குத் திரும்பிவர மூன்று ஆண்டுகளாகிவிட்டது. நாம் இலங்கைக்குச் செல்வதற்கு முன்பு இருந்த தயார்நிலையின் லட்சணம் இதுதான்!
முதல் இரண்டு மாதங்கள் அமைதியாக கழிந்தன. வடகிழக்கு மாகாணத்துக்கு அமைக்கப்பட்ட இடைக்கால நிர்வாகத்தை ஏற்றுக்கொள்வதிலும், ஆயுதங்களை ஒப்படைப்பதிலும் புலிகள் இழுபறி செய்துகொண்டிருந்தார்கள். அவர்களால் பிரச்னை உருவாகலாம் என நான் உணர்ந்தேன். நான் இலங்கையில் காலடி வைத்த உடனேயே, எங்கள் குடும்ப நண்பரும், ஜெயவர்த்தனவிடம் பணிபுரிந்திருந்தவருமான ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ராஜேந்திராவைச் சென்று சந்தித்தேன். அவர் என்னிடம் " ராஜீவ்காந்தி அரசியலில் ஒரு குழந்தை. மகாதந்திரசாலியான ஜெயவர்த்தன ராஜீவை தூக்கிச் சாப்பிட்டுவிடுவார். வரும் அக்டோபரில் உங்களை புலிகளை எதிர்த்து மோத வைப்பதுதான் அவரது திட்டம்" என்று எச்சரித்தார். இதை புது டெல்லிக்கும் நான் தெரிவித்திருந்தேன்.
தன்னுடைய கணிப்பு உண்மையாவதைப் பார்க்க ராஜேந்திரா உயிரோடு இல்லை. போர் தொடங்கிய முதல் வாரத்திலேயே தன் வீட்டுக்கு அருகில் வெடித்த குண்டுக்கு அவர் பலியாகிவிட்டார்.
புலிகளின் இளம் தலைவர்களில் ஒருவரான திலீபன் செப்டம்பர் 15, 1987-ல் "ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் இந்தியாவின் குறைபாடுகளை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கியபோதுதான் பிரச்னை பெரிதானது. இந்தியாவுக்கு எதிரான கண்டனப் போராட்டங்களை புலிகள் யாழ்ப்பாணம் முழுக்க நடத்தினார்கள். புதுடெல்லி இந்த சிக்கலைக் கண்டுகொள்ளவில்லை. இந்திய ராணுவத்திடமே இந்த அரசியல், ராஜதந்திரப் பிரச்னையைச் சமாளிக்கும் பொறுப்பை விட்டுவிட்டது. உண்ணாவிரதத்தைக் கைவிடாத திலீபன், செப்டம்பர் 26, 1987ல் மரணமடைந்தார். ஏற்கெனவே மோசமாகி வந்த எங்கள் உறவு மேலும் கசப்படைந்தது.
இந்நிலையில் நடந்த இன்னொரு முக்கியமான சம்பவத்தால் மேலும் இக்கட்டுகள் உருவாயின. அக்டோபர் 3, 1987 அன்று இலங்கை கடற்படை, புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 13 பேரை பருத்தித்துறை அருகே, அவர்கள் தமிழகத்திலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது நடுக்கடலில் கைது செய்தது. அந்த இரண்டு தலைவர்களும் ஆயுதம் வைத்திருந்தார்கள். பலாலியில் உள்ள இலங்கை ராணுவத் தலைமை முகாமில் அவர்கள் வைக்கப்பட்டனர். அவர்கள் சம்பந்தப்பட்ட பல கிரிமினல் வழக்குகளில் விசாரிப்பதற்காக அவர்களைக் கொழும்புவுக்கு கொண்டு செல்லவேண்டும் என்று ஜெயவர்த்தன விரும்பினார். (அனுராதபுரத்தில் 139 யாத்திரிகர்களைக் கொன்ற தாக்குதலில் புலேந்திரன் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்). அமைதியான சூழ்நிலையைப் பாதுகாக்க, அவர்களை விடுதலை செய்துவிட ஜெயவர்த்தனவின் சம்மதத்தை இந்தியா கோரியது. ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை தான் சிங்களர்களிடம் இழந்த செல்வாக்கை மீட்பதற்கான அரசியல் வாய்ப்பாக அவர் இதைப் பார்த்திருக்கலாம். எங்களுக்கு என்னவோ அவர் ஒருபோதும் அவர்களை உயிரோடு விடமாட்டார் என்றே தோன்றியது.
அக்டோபர் 5 அன்று இலங்கை ராணுவம் அவர்களை வலுக்கட்டாயமாக கொழும்புவுக்கு ஏற்றிச்செல்ல முடிவு செய்தது. அப்போது விமானதளத்தில் நான் இருந்தேன். இலங்கை ராணுவத்தின் யாழ்ப்பாண கமாண்டர் மேஜர் ஜெனரல் ஜெயரத்னே என்னோடு இந்தியாவில் ராணுவப் பயிற்சி பெற்றபோது பரிச்சயமானவர். அவர் இந்திய ராணுவத்திடம் போராளிகளை ஒப்படைத்துவிட கடைசிநேரத்திலும் கொழும்புவுடன் முயற்சி செய்து பார்த்தார். ஆனால் அது பலிக்கவில்லை. "அதிபர் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களைக் கொழும்பு கொண்டு செல்லத்தான் வேண்டும்" என்று மனச்சோர்வுடன் கூறினார். என் அருகே இருந்த ஒரு இலங்கை ராணுவ அதிகாரி, "கடவுளே... திரும்பவும் போர் தொடங்கப்போகிறது'' என்றார்.
அப்போது போராளிகளை இலங்கைப்படையினர் இழுத்துக்கொண்டு வந்தபோது அவர்கள் சயனைடு குப்பிகளைக் கடித்ததைப் பார்த்தோம். முன்னதாக அவர்களை சந்தித்த மாத்தையா ரகசியமாக சயனைடு குப்பிகளைக் கொடுத்திருந்தார். வாயில் நுரைதள்ளி இறந்துகொண்டிருந்த அவர்களை ஆம்புலன்சில் ஏற்றியபோது கை, கால்கள் துடித்துக்கொண்டிருந்தன. இறந்து கொண்டிருந்தவர்களை சில படைவீரர்கள் கால்களால் உதைத்தனர். இந்தச் சம்பவம் என் வாழ்வின் துயரகரமான சம்பவங்களில் ஒன்று.
இரண்டு தலைவர்களின் ஈகோக்களை திருப்திப்படுத்துவதற்காக தேவையில்லாமல் அவர்கள் இறந்தனர். இத்தனைக்கும் சமாதானம் நெருங்கிய காலகட்டம் அது! எனது சகாவான கேப்டன் சந்தோக் அந்த நேரத்தில் கண்ணீர்விட்டார். இந்த சம்பவத்தில் இந்தியா உறுதியாகச் செயல்பட்டிருந்தால் புலிகள் போரைத் தொடுக்கும் கட்டத்துக்குச் சென்றிருக்கமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.
மறுநாள் இலங்கைப் படையினர் 12 உடல்களை எங்களிடம் ஒப்படைத்தனர். (முதலுதவியால் மூன்று போராளிகள் பிழைத்திருந்தனர்.) உடல்களை பெற்றுச்செல்ல மூத்த புலித்தலைவர்களான மாத்தையாவும் யோகியும் வந்திருந்தனர். அச்சூழலில் இறுக்கம் நிலவியது. புலிகளின் சட்ட ஆலோசகரும் எனக்குத் தெரிந்தவருமான கோடீஸ்வரனும் வந்திருந்தார். இந்திய ராணுவத்தோடு போரில் இறங்கவேண்டாம் என்று பிரபாகரனிடம் ஆலோசனை கூறுமாறு அவரிடம் சொன்னேன். "தமிழர்களுக்கு எதிராக நாங்கள் போராட விரும்பவில்லை. நாங்கள் அவர்களுக்கு உதவி செய்யவே வந்தோம். எங்கள் ராணுவம் மிகப்பெரியது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு நாங்கள் போராடமுடியும். நாகாலாந்தில் 30 ஆண்டுகளாக போரிட்டுக் கொண்டிருக்கிறோம். பிரபாகரனுக்கு இதை உணர்த்துங்கள்" என்றேன். "சார் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் தம்பியிடம் யார் சொல்வது?" என்றார் அவர் வருத்தத்தோடு. மாத்தையா முகத்தில் சலனமில்லை.
"நீங்கள் இப்போது எங்களிடம் 12 போராளிகளின் உடல்களைக் கொடுக்கிறீர்கள். உங்களிடம் உங்கள் படையினரின் 1200 உடல்களை நாங்கள் கொடுப்போம்" என்றார் அவர். வெள்ளைத்துணியில் சுற்றப்பட்ட உடல்கள், புலிகளின் வேனில் ஏற்றப்பட்டன. மாத்தையாவின் கணிப்பு பலித்தது. நாம் புலிகளோடு நடத்திய போரில் 1255 வீரர்களை இழந்தோம்.
ஆனால் அவரால் தன் சாவைத்தான் கணிக்க முடியவில்லை. 'ரா' உளவாளி என்று கருதி, பிற்காலத்தில் பிரபாகரன் தன்னைக் கொல்வார் என்று மாத்தையாவால் கணிக்க முடியாமல் போய்விட்டது! எனது நண்பரும் மென்மையாக பேசக்கூடியவருமான கோடீஸ்வரனும் அடையாளம் தெரியாத நபர்களால் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். என்ன ஒரு வேண்டாத இழப்பு!
மனித இனம் போரைப் போற்றியே வந்திருக்கிறது. இதிகாசங்களில் அவை பெருமைப்படுத்தப்பட்டிருக்கின்றன. நான் மூன்று பெரிய போர்களையும் குறைந்தது 10 உள்ளூர் தீவிரவாதிகளுடனான போர்களையும், இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கையில் பார்த்திருக்கிறேன். உண்மையில் போர்கள் துயரமானவை. ஏனெனில் அவற்றில் மரணம் ஒவ்வொரு நாளும் நம்மைச் சந்திக்கிறது. ராணுவத்தில் நான் இருந்த 30 ஆண்டுகளில் எனக்குத் தெரிந்த எவ்வளவோ பேரை இழந்திருக்கிறேன். அவர்கள் பல ராணுவங்களையும் போராளிக் குழுக்களையும் சேர்ந்தவர்கள்.
தங்கள் கொள்கைக்காக அவர்கள் போராடி உயிரிழந்தனர். ஆனால் அதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? யோசித்துப் பார்க்கிறேன். மதுரையைச் சேர்ந்த ஒரு விதவைத் தாயின் ஒரே மகன் மேஜர் கோபால கிருஷ்ணா, இந்திய - பாகிஸ்தான் போருக்கு சற்று முன்பாக சோவியத் யூனியனுக்கு சிறப்புப் பயிற்சிக்கு புறப்பட இருந்தார். போர் வந்துவிட்டதால் அவர் செல்லவில்லை. அடுத்தநாளே, அதாவது போருக்கு இரண்டு நாட்கள் முன்பாக எல்லையில் நாங்கள் சிலர் சென்றுகொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த ஒற்றைக் குண்டுக்கு அவர் பலியாகிவிட்டார்.
திரிகோணமலையில் ஒருமுறை புலிகள், எங்களை ஆதரித்துக்கொண்டிருந்த ஈபிஆர்எல்எஃப் தலைவரான பத்மநாபாவைக் கொல்ல இரண்டு கொலையாளிகளை அனுப்பியிருப்பதாக தகவல் அறிந்தேன். அதிகாலை 3 மணிக்கு அவரை எழுப்பி தகவல் தெரிவித்தேன். பத்மநாபா அதைக் கேட்டு சிரித்தார். "கர்னல் சார், இதற்கெல்லாம் என்னை எழுப்பாதீர்கள். இதை நினைத்து நீங்களும் தூக்கம் இழக்கவேண்டாம். நான் ஆயுதம் ஏந்திய அன்றே இறந்துபோய்விட்டேன்" என்று கூறிவிட்டு அவர் தூக்கத்தைத் தொடர்ந்தார். ஆனால் என்னால் தூங்கமுடியவில்லை.
அப்போது அவர் உயிர்தப்பினார் என்றாலும், போர் முடிந்த பிறகு சென்னையில் அவரை புலிகள் கொன்றுவிட்டனர். போர்களில் மரணத்தை நானும் அருகே சந்தித்திருக்கிறேன். இலங்கையில், 1989 என்று நினைக்கிறேன். லெப்டினெண்ட் ஜெனரல் ஏ.எஸ். கல்கட்டுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் நித்திகைகுளம் என்ற இடத்தில் நமது படைகள் புலிகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த இடத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றோம். ஹெலிகாப்டரிலிருந்து இறங்கிய உடனேயே புலிகளின் ராக்கெட் ஒன்று தாக்கியது. ஹெலிகாப்டர் நெருப்புக் கோளமாக வெடித்தது. நாங்கள் மயிரிழையில் பிழைத்தோம். அருகிலிருந்த ஏரிக்கரையைத் தாண்டி நாங்கள் பதுங்கியபோது, இன்னொரு ராக்கெட் பாய்ந்து வந்து அருகில் நின்று கொண்டிருந்த வேறொரு ஹெலிகாப்டரைத் தாக்கியது. எங்களுக்குப் பாதுகாப்பாக மேலே வட்டமிட்டுக்கொண்டிருந்த ஹெலிகாப்டர் புலிகளைத் திருப்பி தாக்கியது. ஆகவே, நாங்கள் பிழைத்தோம். அன்றுதான் நான் போர்களை வெறுக்க ஆரம்பித்தேன். உயிர் பயத்தால் அல்ல, அவற்றுக்கு எந்தவிதமான அர்த்தமும் இல்லை என்பதால். போர் தொடங்குவதற்கு முன்பே ஏன் கோபாலகிருஷ்ணா ஒற்றை தோட்டாவுக்குப் பலியானார்? போரின் நடுவே ராக்கெட் தாக்குதலையும் மீறி எப்படி நாங்கள் உயிர் தப்பினோம்? என்னிடம் பதில்கள் இல்லை.
புதன், 28 ஜனவரி, 2009
ஆஃப்லைனில் ஜிமெயில் மின்னஞ்சல் வசதி
மின்னஞ்சல்களை பெறவேண்டும் என்றாலோ, அனுப்ப வேண்டும் என்றாலோ அதற்கு இன்டர்நெட் இணைப்பு தேவை. இது விரைவில் அந்தக் காலம் ஆகப்போகிறது.
இன்டர்நெட் இணைப்பு இல்லாமலோ, ஜிமெயில் கணக்கை கொண்டு மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது பெறவோ முடியும் வசதி, பரிசோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூகுல் நிறுவனத்தின் ஜிமெயில் லேப்ஸ் இந்த வசதியை பரிசோதனை முயற்சியில்
ஜனவரி 27-ல் தொடங்கியிருப்பதாக ஜிமெயில் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிமெயில் கணக்கில் உள்நுழைந்து அதில் உள்ள செட்டிங்ஸ் உள் சென்று லேப்ஸ்-ஐ கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆப்லைன் வசதியை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு தெரிவு செய்த பின்னர் ஜிமெயில் உங்களது கணினியில் ஒரு கியர் மூலமாக ஜிமெயில் சர்வரில் இருந்து உங்களது மின்னஞ்சல் தகவல்களை உங்களது ஹார்ட் டிஸ்கில் பதிவு செய்து விடுகிறது.
இப்போது உங்களிடம் இன்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும் நீங்கள் கவலைப்படாமல் வழக்கம் போல் உங்களுடைய மின்னஞ்சல்களை படிக்கலாம், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், மின்னஞ்சல்களை அனுப்பலாம்.
ஆப்லைனில் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது அவை அவுட்பாக்சில் சேமிக்கப்பட்டு, ஜிமெயில் நெட்வொர்க் சர்வருடன் இணைப்பு கிடைக்கும்போது அவற்றை அனுப்பி விடுகிறது.
தற்போது கூகுல் நிறுவனத்தில் சிலர் பரிசோதனை அடிப்படையில் இந்த வசதியைப்
பயன்படுத்தி வருகின்றனர். ஆப்லைனில் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களை அனுப்பி, பெற்றுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த சில தினங்களில் யுஎஸ் அல்லது யுகே இங்கிலிஷ் பயன்படுத்தும் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த வசதியை பயன்படுத்தமுடியும்.
எனவே இன்டர்நெட் கனெக்ஷன் இல்லையே... எப்படி மெயில் செக் செய்வது இனி யாரும் கவலைப்படத் தேவையில்லை!
வெள்ளி, 23 ஜனவரி, 2009
அந்த 93 மைல் இடைவெளியில்...
தனக்கு அருகில் இருக்கும் அந்த சின் னஞ்சிறிய தீவை பொறுத்துக்கொள்ள முடியாமல் எப்படியாவது தீர்த்துக்கட்டி விட வேண்டும் என்பதற்கான வன்மத் தோடு 250 கோடி டாலர்கள் செலவில் ஒரு தனி வானொலியையே துவக்கி, இரு பத்து நான்கு மணி நேரமும் செய்யப்பட்ட எதிர் பிரச்சாரங்கள் ஒருபுறம்.. 2001ம் ஆண்டில் செப்டம்பர் 11 தாக்குதலின் போது பற்றி எரிந்து கொண்டிருந்த பகுதி களில் பணியாற்றிய போது விபத்துக்குள் ளான அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் அனைவரையும் தன் நாட்டிற்கு அழைத்து உயர்தர சிகிச்சைகள் அனைத்தும் அளித்து, தனது நாட்டு தீயணைப்பு நிலையங்களில் மரியாதை செய்து திருப்பி அனுப்பிய மனிதாபிமானம் மறுபுறம்.. உல கின் பல முனைகளில் தனது நாட்டு ராணுவத்தை நிறுத்தி, கோடிக்கணக் கான டாலர்களை செலவழித்து உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக் கும் மோசமான தேசம் ஒன்று.. ஆனால் 26 லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டும் சுமார் மூன்று லட்சம் மக்களுக்கு தன் செலவில் இலவசமாக கண்அறுவை சிகிச்சை செய்திருக்கும் உன்னத தேசம் மற்றொன்று...
பேரழிவு ஆயுதங்கள் இருக்கிறது என்று சொல்லி ஒரு நாட்டிற்குள் புகுந்து அந்நாட்டு அதிபரை கொன்று குவித்த நய வஞ்சகம் ஒருபுறம் எனில், உலகில் ஆயு தங்களை அழித்து சமாதானத்தை நிலை நாட்டுவோம் என்கிற ஆலோசனை யோடு அனைவரையும் ஆரத்தழுவும் அர சியல் பண்பாடு மறுபுறம். விழாவொன் றில் கால் இடறி ஒரு நாட்டின் அதிபர் விழுந்த காட்சியை உலகின் அனைத்து ஊடகங்களிலும் திரும்ப திரும்ப ஒளிபரப்ப வேண்டும் என கட்டளையிட்டு ஆர்ப்ப ரித்த காட்சி ஒருபுறம் என்றால், தான் வாங்கிய செருப்படி காட்சிகளை எங்குமே ஒளிபரப்பக்கூடாது என அதட்டி உத்தர விட்டதோடு அந்த செருப்பையும் கூட உடனடியாக அழித்த காட்சி மறுபுறம்...
பட்டியலிட்டால் தொடர்ந்துகொண்டே போகும் இத்தகைய முரண்பாடுகள்... இத்தகைய முரண்பாடுகளின் பூகோள இடைவெளி வெறும் 93 மைல் மட்டுமே. ஆனால் இந்த முரண்பாடுகள் தற்செயலா னது அல்ல.. இவைகளின் பின்னணியில் அதற்கான காரணமும சித்தாந்த அடை யாளமும் இருக்கிறது. ஒன்றின் பெயர் ஏகாதிபத்தியம் அல்லது அமெரிக்கா... மற் றொன்று சோஷலிசம் அல்லது கியூபா... உலகின் அனைத்து தேச மக்களையும் தனது மக்களைப் போலவே பாவிக்க முடியுமென்றால் அதன் பெயரே சோசலி சம்.. தன் தேசத்து மக்களையும் கூட ஒரு அரசால் வெறுக்க முடியுமென்றால் அதன் பெயர் ஏகாதிபத்தியம்.
கொலை முயற்சிகள், பொருளாதார தடைகள், எதிர்ப்பிரச்சாரங்கள் என அனைத்தையும் தாண்டித்தான் தனது பொன்விழா ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறது கியூபா என்ற அந்த சோசலிச தேசம்... பொன்விழா கொண் டாட்டங்களின்போது மேற்கத்திய ஊட கங்கள் அந்நாட்டு மக்களிடம் கேட்டது... "உங்கள் பிடல் காஸ்ட்ரோ காலத்திற்கு பின்பு ஒருவேளை அமெரிக்கா உங்கள் மீது போர் தொடுத்தால் என்ன செய் வீர்கள்...? மக்கள் சொன்ன பதில்... "இறு திவரை சோசலிசம் அல்லது வீரமரணம்..." கியூப மக்களின் இந்த பதிலுக்கு நம் வீர வணக்கங்கள்... மக்களை நேசிக்கிற அனைவரும் சோசலிசத்தை நேசிப்பவர் களே.. கியூப புரட்சியின் பொன்விழா என் பது சோசலிசத்தின் பொன்விழா... உலக மக்களின் பொன்விழா... அதை உற்சாகத் தோடு கொண்டாடுவோம்...
புகைப்பதை நிறுத்துவது எப்படி?
மார்க் ட்வெய்ன் ஒரு முறை சொன்னாராம், "புகைப்பதை நிறுத்துவதென்பது எளிதான விஷயம். நான் 1000 தடவைகள் அந்த மாதிரி நிறுத்தியிருக்கிறேன்" என்று.
புகைப்பதை நிறுத்துவதற்கு எளிதான வழியென்று Cold Turkey முறை என்று ஒன்று சொல்கிறார்கள். முதலில் புகைப்பதை நிறுத்துவதற்கான ஒரு நாளை தேர்ந்தெடுக்கவும். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தள்ளி ஒரு நாளை தேர்ந்தெடுப்பது உத்தமம் என்கிறார்கள். பிறகு அந்த நாளை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக புகைக்கும் பழக்கத்தை குறைத்துக் கொண்டே சென்று, குறிப்பிட்ட நாளில் சுத்தமாக நிறுத்தி விட வேண்டும். ஆனால் இது ஆகிற வேலையாக எனக்குப் படவில்லை.
ஒரு கணவனிடம் மனைவி ஒருத்தி முறையிட்டாளாம், "என்னங்க, என் தம்பி சந்நியாசம் வாங்கப் போகிறானாம். கொஞ்சம் கொஞ்சமா உலக ஆசைகளையெல்லாம் ஒன்னு ஒன்னா விட்டுகிட்டிருக்கான்."
அதற்கு கணவன் "கவலைப்படாதே! உன் தம்பி கண்டிப்பா சந்நியாசியா ஆக மாட்டான்" என்று ஆறுதல் சொன்னானாம்.
உடனே மனைவி, "அதெப்படி உறுதியா சொல்றீங்க?"
கணவன், "இப்படி கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சந்நியாசி ஆக முடியாது. அதனால உன் தம்பி சந்நியாசி ஆக மாட்டான்" என்று சொன்னான்.
அதற்கு மனைவி "பின்னே கொஞ்சம் கொஞ்சமா ஆகாம, எப்படி சந்நியாசி ஆவாங்க?" என்று கேட்டாளாம்.
உடனே கணவன் "இப்படித்தான்" என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி சந்நியாசியாகி போய் விட்டானாம்.
புகைப்பது, குடிப்பது போன்றவைகளையும் இப்படித்தான் டக்கென்று ஒரு நிமிடத்தில் முடிவெடுத்து ஒரேயடியாக விட்டு விட வேண்டும். ஆனால் இப்படி நிறுத்துவதற்கு, சந்நியாசம் வாங்க எவ்வளவு மனப்பக்குவம் தேவையோ அந்தளவுக்கு மனவலிமை தேவை.
சரி, "டக்"
நிறுத்தியாயிற்று. 10 நிமிஷம் ஆயிற்று. 30 நிமிஷம். ஒரு மணி நேரம் ஆயிற்று. அடுத்த தம் போட வேண்டிய நேரம். "தம் அடிக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டாலும் அந்த தம் அடிக்க வேண்டும் போல் இருக்கும் உணர்வு வரும்பொழுது என்ன செய்வது?"
அந்த மாதிரி உணர்வு ஏற்படும் நேரத்தில், யாரிடமாவது பேசுங்கள், சிறிது காலாற நடை போடுங்கள்(அப்படியே நடந்து பெட்டிக்கடைக்கு போய் விடாதீர்கள்!), தண்ணீர் குடித்து பாருங்கள். செய்யும் வேலையில்/வேறு ஏதாவது பொழுதுபோக்கில் முழு கவனத்தையும் செலுத்த முயலுங்கள்.
"தினசரி சாப்பிட்டவுடன் ஒரு தம் அடித்து பழகியாயிற்று. இப்பொழுது திடீரென்று எப்படி அதை மாற்றுவது?"
டோட்டலாக தம் அடிப்பதுடன் சம்பந்தப்பட்ட அந்த பழக்க முறையையே மாற்றுங்கள். உதாரணத்திற்கு, சாப்பிட்டவுடன் தம் அடிப்பவராக இருந்தால், வழக்கமாக சாப்பிடும் இடத்தில் சாப்பிடாமல் வேறு இடத்தில் சாப்பிடுங்கள். காபி குடித்தவுடன் தம் அடிக்க வேண்டுமா? காபி குடிக்கும் நேரத்தில் டீ குடித்து பழகுங்கள். காலையில் ஆஃபீஸ் வரும் வழியில் நின்று ஒரு தம் அடிப்பவராக இருந்தால், வழக்கமான வழியை மாற்றி புது வழியில் வர முயலுங்கள். இது போல் தம் அடிக்கும் செயலுடன் சம்பந்தப்பட்ட மற்ற பழக்க முறைகளில் இருக்கும் ஒழுங்கு முறைகளை உடைத்துப் போடுங்கள்.
"நான் இது போல் பல தடவைகள் தம்மை விட முயன்றிருக்கிறேன். ஆனால் அப்பொழுதெல்லாம் முடியவில்லையே. என்ன செய்ய?"
திரும்பவும் முயலுவோம். தவறில்லை. சென்ற தடவைகளில் தம்மை விட முயன்ற பொழுது என்னென்ன தவறுகள் செய்தோம் என்பதை ஞாபகப்படுத்தி, அவற்றை தவிர்க்க முயலுங்கள்.
முக்கியமான தேவை மனவலிமை. முதல் மூன்று நாட்கள் தாண்டுவது மிகக் கடினம். அதற்குபின் கொஞ்சம் பழகிவிடும். தொடர்ந்து மூன்று மாதம் இருந்து விட்டால், அப்புறம் சுத்தமாக நினைவையே விட்டு விடலாம்.
வியாழன், 22 ஜனவரி, 2009
கணினியில் எளிதில் படிக்க ஒரு ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி
எனக்கு கடந்த சில நாட்களாக கண் எரிச்சல் உண்டாகி ஃபிகர்கள் சரியாக தெரியாமல் போய் சிரமப்பட்டு வருகின்றேன்.
இருந்தாலும் எப்படியும் படித்துவிட வேண்டும் என்ற உந்துதலில் தேடிய போது கிடைத்தது இந்த ஃபயர்ஃபாக்ஸ் ஆட் ஆன்.
எந்த நிறத்தில் திரை இருந்தாலும் அதை ஒரே சொடுக்கில் கருப்பு பின்புலமாகவும், வெண்ணிற எழுத்து நிறமாகவும் மாற்றி எளிதில் படிக்க வழி செய்கிறது. இந்த அமைப்பை நம்மால் மாற்றிக்கொள்ளவும் இயல்கிறது
ஆனால் இது செயல்பாட்டில் உள்ள போது சில இடங்களில் தட்டச்சுவது சிரமமாக இருக்க வாய்ப்புள்ளது.
எனினும், சிறந்த ஒரு ஆட் ஆன்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/7166
Tiny XP மென்பொருள் : குறைந்த வேகமுள்ள கணணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சில சமயங்களில் ஒரிஜினலைவிடடூப்ளிகேட்டுகள் நன்றாக அமைவதுண்டு.அதற்கு மிகச்சிறந்த உதாரணந்தான் இந்தTiny XP. விண்டோஸ் XP யில் பலவிதமான பயன்பாடுகள் உள்ளன. ஆனால்இவற்றில் 30% தையாகிலும் நாம்முழுமையாக பயன்படுத்துவதில்லை.
ஏன், அவற்றை பற்றிஅறிந்துகொள்ளக்கூட நமக்குநேரமிருப்பதில்லை. அதற்கானஅவசியமும் ஏற்படுவதில்லை. ஆகநமக்கு தேவையான ஓரிருபயன்பாடுகளுக்காக முழு Windows XPயையே லோட் பண்ணி கணினியின்தலையில் சுமையேற்றி விடுகிறோம்.இதனால் நம்ம பிஞ்சு கம்பியுட்டருக்குநாக்கு வெளியே தள்ளி டவுசர் கிழிந்து போகும்.
இப்படி டவுசர் கிழியும் கணினிகளை பார்த்து சகிக்கமாட்டாத நம்மள மாதிரி இல்லாதநல்லவங்க கொஞ்சப்பேர் சேர்ந்து இதுக்கெல்லா காரணமான XP யோட டவுசரை கிளிக்கமுயன்று வந்த வெற்றிகரமான முடிவுதான் இந்த Tiny XP.
Tiny XP யில் நாம் அதிகமாக பயன்படுத்தும் செயற்பாடுகளைத்தவிரமிச்சமுள்ளதெல்லாவற்றையும் கடாசிவிட்டார்கள். மிக முக்கியமானதென கருதுபவற்றைமாத்திரம் விட்டுவைத்திருக்காங்க.
இணைய இணைப்பு வசதி, பிரிண்டிங் வசதி, போன்ற முக்கியமாக செயற்பாடுகள் மாத்திரமேஇதில் உள்ளன. இதனால் நமது கணினியின் சுமை குறைக்கப்படுகிறது. அதேவேளைகணினியை வேகமாக செயற்படவும் வைக்கிறது.
Tiny XP யை பல வேர்ஷனாக வெளியிட்டிருக்கிறார்கள். 55 MB முதல் 600 MB வரையிலான CD Image ISO கிடைக்கின்றன. 400MB Hard Disk space, 40 MB Ram இலேயே ஆகப்போக 8 - 15 நிமிடநேரத்திலேயே இன்ஸ்டால் பண்ணக்கூடியதான XP என்றால் ஆச்சரியமானதுதானே!!! அப்போநம்ம சாதாரண கணனிகள் ச்சும்மா அதிருமே!!! ( வழமையாக XP Full Install ஆனது 1100MB Hard disk space எடுத்துக்கொள்ளும். குறைந்தது 256MB Ram ல்கூட இழுத்திழுத்து வேலை பண்ணும்.இன்ஸ்டால் பண்ண 20-60 நிமிடங்கள் ஆகும்)
நமக்கு தோதான வெளியீட்டை தரவியக்கிக்கொள்ளலாம். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.இவையனைத்தும் Pirate Versions!!!.
Tiny XP Rev 09 ஆனது லேட்டஸ்ட்டாக வந்தது. இதில இப்ப பிளாட்டினம் வேர்ஷனேல்லாம்வெளியிர்றாங்க!!!. SP3 யும் சேர்த்து குடுக்கறாங்க.
Torrents web site எதிலும் Tiny Xp என குடுத்து நீங்க டவுண்லோடு பண்ணலாம். eXperiance என்றுஇருக்கற Tiny XP நல்லது.
இலங்கை தமிழர்களும் ஈழத் தமிழர்களும் ஒரே மக்களா?
அதாவது பிரிட்டிஷ் அரசு நம்மை ஆண்டு கொண்டிருந்த போது, அடிமைகளாகஇருந்தநம்மில் ராமநாதபுரம், தருமபுரி மாவட்டங்களில் இருந்து இவர்களை கி.பிஆம் ஆண்டுகூலி இல்லாமல் இவர்களை இலங்கைக்கு அழைத்துசெல்கிறது.
ஈழத் தமிழர்கள்:
ஈழத் தமிழர்கள் கி.மு 1500௦ ஆண்டுகளுக்கு முன்னே குடியேறியவர்கள். சிங்களர்கள்கி.பி 8 ஆண்டுதான் அங்கு குடியேறியவர்கள் இது சிங்களவர்களின்மகா வம்சம் என்றநூலிலே உள்ளது. வரலாறு தெரியாமல் உளருவர்களை பற்றிகூறுவதற்கு ஒன்றும்இல்லை.............
1948 - Feb 4 ல் இலங்கை சுதந்திரம் அடைகிறது.
சுதந்திரம் அடைந்த ஓரிரு நாட்களில் சிங்கள அரசு உலக வரலாற்றில்எங்கும்இல்லாத அளவு ஒரு சட்டம் இயற்றுகிறது அது 8 லட்சம் இந்திய வம்சாவழிமலையக தொழிலாளர்களை ஒரே நாளில் நாடற்றவர்களாக அறிவித்துஇவர்களின்ஓட்டுரிமை, சொத்துரிமை அனைத்தும் பறிக்க படுகிறது.
அதையும் இந்த மானம்கெட்ட தேசம் அங்கிகரித்து அப்பொழுது பிரதமராகஇருந்தலால்பகதூர் சாஸ்த்ரி-பண்டாரநாயக் ஒப்ப பந்தத்தின் படி 5 லட்சம்தமிழகமக்களை 3 கப்பல்களை அனுப்பி திரும்ப பெற்று கொண்டது. மிகமுக்கியமானது, அந்த கப்பல்களை அனுபுவதற்குன்டான செலவையும் இந்திய அரசேஏற்றுகொள்கிறது
அவர்கள் அங்கு விரும்பி சென்றார்களா அதுதான் இல்லை!!!!
அதாவது பிரிட்டிஷ் அரசு நம்மை ஆண்டு கொண்டிருந்த போது, அடிமைகளாகஇருந்தநம்மில் ராமநாதபுரம், தருமபுரி மாவட்டங்களில் இருந்து இவர்களை கி.பிஆம் ஆண்டுகூலி இல்லாமல் இவர்களை இலங்கைக்கு அழைத்துசெல்கிறது.
அங்கு அவர்கள் ஒன்றுமே இல்லாத சதுப்பு நிலங்களை தேயிலை தோட்டங்கள்ஆகமாற உழைத்தவர்கள், அதாவது கிட்ட தட்ட 220 வருடங்கள். இலங்கையில்வருவதுஇரெண்டே வருமானம்தான் ஒன்று சுற்றுலா துறை மற்றொன்றுதேயிலை. அந்தவருமானத்திற்காக உழைத்த நம் மக்களைத்தான் ஒரே நாளில்வெளியேறசொன்னார்கள்.
இங்கு ஒன்று மிக முக்கியமாக கவனிக்கபடகூடியது நாம் 3 வருடம் ஒருநாட்டில்வேலை செய்தாலே Green card கேட்கின்றோம் ( Specifically for Software Engineers) ஆனால் 220 வருடங்கள் வாழ்ந்த அவர்கள் எந்தவிதவருமானமும்பெறாமலேயே இந்திய நாட்டுக்கு திருப்பி அனுப்பபட்டனர்.
இன்றுவரை அவர்கள் எந்தவித உரிமையும் கிடைக்காமலே தமிழகமலைஓரங்களிலும் ரோடோரதிலும் அலைந்து கொண்டிருகின்றனர்
இதுவே இந்திய தேசம் இலங்கை தமிழர்களுக்கு செய்த முதல் துரோகம்............
புதன், 21 ஜனவரி, 2009
வலி கலந்த நம்பிக்கை
|
திங்கள், 12 ஜனவரி, 2009
தமிழர் திருநாள் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்தத் தைத் திருநாளில் உங்கள் எல்லா நன்முயற்சிகளுக்கும் வழி பிறக்க வேண்டுகிறேன்.
அன்புடன்
கண்டுபிடிப்புகள் பாகம் - 1
அதை அவர்கள் எப்படி கண்டுபிடித்து இருப்பார்கள் , அதற்காக எவளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்று நினைவு கூர்வது அவர்களின் கண்டுபிடிப்பை உபயோகிக்கும் நமது கடமை.
1) உதாரணமாக இன்று நாம் பொழுதை கழிக்க எத்தனை செயல்கள் செய்தாலும் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தால் நம்மை மகிழ்ச்சி படுத்துவது எது என்று உங்களுக்கு தெரியுமா ? .இன்று உலக மக்களால் சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக கருதப்படும் தொலைக்காட்சியே அந்த சாதனம்.
அதை கண்டுபிடித்தவர் : ஹோவன்னேஸ் அடமியான் (Hovannes Adamian)
இவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர் . இவர்தான் முதன்முதலில் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியையும் கண்டுபிடித்து கலர் தொலைக்காட்சியையும் கண்டுபிடித்தார்.
2) தொலைகாட்சி கண்டுபிடித்தார்கள் சரி . அதை இயக்க ஒவ்வொரு முறையும் எழுந்துசென்று சேனல்களை மாற்றவும் , சத்தத்தைக் குறைக்கவும் கஷ்டபடுவார்களே என்று அதை கண்டுபிடித்தவர்கள் நினைத்து பார்க்கவில்லை போலும் . எனவே அதை அமெரிக்காவின் ராபர்ட் அட்லேர் (Robert Adler) என்பவர் ரிமோட்டை கண்டுபிடித்துக் கொடுத்தார் . இவர் இயற்பியல் துறையில் P.hd முடித்தவர்.
3) உலகத்தின் எந்த மூளையில் இருந்துகொண்டும் நம்மால் எந்த திசையையும் அறிந்துகொள்ள முடியும் .அதற்க்கு காரணம் வடதிசையின் காந்தபுல திறனைக்கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட திசைக்காட்டி (Compass) . இதில் என்ன ஒரு சிறப்பு என்றால் வடதிசைதான் காந்த புல திறன் அதிகம் கொண்ட திசை என்பதே பெரும் கண்டுபிடிப்பு . இந்த திசைக்காட்டியை வடிவமைத்தவர் அல்-ஆஸ்ஹ்ரப் (Al-Ashraf) என்பவர்தான் . இவர் எமன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி .
மற்றுமொரு தகவல் : இன்று நாம் தொலைபேசியையோ , கைபெசியையோ கையில் எடுத்ததும் பேசும் முதல் வார்த்தை ஹலோ (Hello). இந்த வார்த்தைதான் அலெக்சாண்டர் கிரகாம்பெல் தொலைபேசியில் பேசிய முதல் வார்த்தை . அதைத்தான் நாம் கடைபிடிக்கிறோம் .