தமிழ் புதையல்

திங்கள், 12 ஜனவரி, 2009

கண்டுபிடிப்புகள் பாகம் - 1

நாம் இன்று மூச்சுக்கு முன்னூறு தடவை பயன்படுத்தும் பொருட்கள் , சாதனங்கள், யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெரியாது . நமது பள்ளி வயதில் ஏதோ கொஞ்சம் தெரிந்து வைத்திருப்போம் . ஆனால் அது நினைவில் இருப்பது கடினமே . அதை தெரிந்துகொண்டு நாம் என்ன செய்ய போகிறோம் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது . இருப்பினும் கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பது அதை கஷ்டப்பட்டு கண்டுபிடித்த அந்த மேதைகளுக்கு நாம் அளிக்கும் மரியாதையே .

அதை அவர்கள் எப்படி கண்டுபிடித்து இருப்பார்கள் , அதற்காக எவளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்று நினைவு கூர்வது அவர்களின் கண்டுபிடிப்பை உபயோகிக்கும் நமது கடமை.

1) உதாரணமாக இன்று நாம் பொழுதை கழிக்க எத்தனை செயல்கள் செய்தாலும் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தால் நம்மை மகிழ்ச்சி படுத்துவது எது என்று உங்களுக்கு தெரியுமா ? .இன்று உலக மக்களால் சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக கருதப்படும் தொலைக்காட்சியே அந்த சாதனம்.



அதை கண்டுபிடித்தவர் : ஹோவன்னேஸ் அடமியான் (Hovannes Adamian)
இவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர் . இவர்தான் முதன்முதலில் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியையும் கண்டுபிடித்து கலர் தொலைக்காட்சியையும் கண்டுபிடித்தார்.


2) தொலைகாட்சி கண்டுபிடித்தார்கள் சரி . அதை இயக்க ஒவ்வொரு முறையும் எழுந்துசென்று சேனல்களை மாற்றவும் , சத்தத்தைக் குறைக்கவும் கஷ்டபடுவார்களே என்று அதை கண்டுபிடித்தவர்கள் நினைத்து பார்க்கவில்லை போலும் . எனவே அதை அமெரிக்காவின் ராபர்ட் அட்லேர் (Robert Adler) என்பவர் ரிமோட்டை கண்டுபிடித்துக் கொடுத்தார் . இவர் இயற்பியல் துறையில் P.hd முடித்தவர்.




3) உலகத்தின் எந்த மூளையில் இருந்துகொண்டும் நம்மால் எந்த திசையையும் அறிந்துகொள்ள முடியும் .அதற்க்கு காரணம் வடதிசையின் காந்தபுல திறனைக்கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட திசைக்காட்டி (Compass) . இதில் என்ன ஒரு சிறப்பு என்றால் வடதிசைதான் காந்த புல திறன் அதிகம் கொண்ட திசை என்பதே பெரும் கண்டுபிடிப்பு . இந்த திசைக்காட்டியை வடிவமைத்தவர் அல்-ஆஸ்ஹ்ரப் (Al-Ashraf) என்பவர்தான் . இவர் எமன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி .


4) அலெக்ஸ்சாண்டர் கிரகாம்பெல் (Alexander Graham Baell)
மிகவும் மதிக்கத்தக்க கண்டுபிடிப்பாளர்களில் மிகமுக்கியமான ஒரு கண்டுபிடிப்பாளர் . உலகின் எந்த ஒரு இடத்தில் இருப்பவரையும் நொடி நேரத்தில் இன்று நாம் தொடர்புகொண்டு பேசமுடிகிறது . இன்று அறிவியலின் வளர்ச்சிகள் , பரிணாம உயர்வுகள் தொடமுடியாத இலக்கை அடைந்திரிந்தாலும் , கைபேசிகள் உபயோகித்தாலும் இவரது தொலைபேசி கண்டுபிடிப்புதான் அடிப்படை . முக்கியமான தகவல் இவர் தனது முதல் தொலைபேசியை உலகிற்கு அறிமுகபடுத்தும்போழுது இவரால் தன் குடும்ப நபர்களிடம் முதலில் பேச முடியவில்லை . ஏன் என்றால் இவரது மனைவி செவிடு , இவரது அம்மா ஒரு ஊமை . எனவே இவர் தன் நண்பனிடம்தான் முதலில் பேசினாராம் .

மற்றுமொரு தகவல் : இன்று நாம் தொலைபேசியையோ , கைபெசியையோ கையில் எடுத்ததும் பேசும் முதல் வார்த்தை ஹலோ (Hello). இந்த வார்த்தைதான் அலெக்சாண்டர் கிரகாம்பெல் தொலைபேசியில் பேசிய முதல் வார்த்தை . அதைத்தான் நாம் கடைபிடிக்கிறோம் .
5) மனிதன் கண்டுபிடிப்பில் வியந்த ஒரு பொருள் கண்ணாடி (GLASS). இதை கனடாவை சேர்ந்த கதரின் பர் ப்லோட்கேத்ட் (Katharine Burr Blodgett) என்ற பெண்மணி கண்டுபிடித்தார் . இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்று பின் பிரதிபலிக்காத பொருட்கள் பற்றிய ஆராய்ச்சியில் தனது கண்ணாடி என்னும் பொருளை இந்த உலகிற்கு அறிமுகபடுத்தினார் .
6) 98.3, 93.5 இது உங்கள் எப்.எம் , It's very Hot மச்சி- ரேடியோ மிர்ச்சி . என்று தூக்கம் விழித்ததிலிறிந்து இரவு உறங்க செல்லும் வரை இன்று மக்களால் தவிர்க்கமுடியாத ஒரு சாதனம் இந்த எப்.எம் ரேடியோ அலைவரிசைகள் . இதை கண்டுபிடித்தவர் பெயர் எட்வின் ஹட்ச். ஆர்ம்ஸ்ட்ரோங் (Edwin H. Armstrong ) . இவர் அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் கண்டுபிடிப்பாளர் .


7) இங்கை (INK) ஒரு டியுபின் வழியே வழியச் செய்து அதை ஒரு உருளும் சிறு பந்தின் வழியே எழுதும் வேகத்திற்கு ஏற்ப சரளமாக எழுத இன்று நாம் பயன்படுத்தும் (Reynolds, Cello,..etc) Ball Point Pen - பேனாக்களை வடிவமைத்துக் கொடுத்த மேதை லஷ்லோ பீரோ (Laszlo Biro) .


8) காகிதத்தை இந்த உலகிற்கு அறிமுக படுத்தியவர்கள் சீனர்கள் என்பது நமக்கு தெரியும். சீனர்களின் கண்டுபிடிப்புகள் சற்றே வித்தியாசப்படும். அதேபோல் நம்மால் தவிர்க்கமுடியாத ஒன்றுதான் காகிதம் (PAPER). இதை சீனாவைச் சேர்ந்த கிலுன் (Cai Lun) கண்டுபிடித்தார் .இவர் இந்த கண்டுபிடிப்பை 50 களில் அறிமுகபடுத்திவிட்டார்.



9) எளிதில் அறுந்துபோகாத கயிறு வகைகளில் நைலோன் (Nylon) என்னும் பொருளைக் கொண்டு கண்டுபிடித்த இவரது கண்டுபிடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது . நைலானை கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த வாள்ளசே கரோதேர்ஸ் (Wallace Carothers ) ஆவார் .


10 ) குளிர்சாதனப் பெட்டி : வில்லியம் கில்லேன் (William Cullen)



இன்னும் நிறைய கண்டுபிடிப்புகள் இருக்கின்றன . அதை அடுத்த பதிவில் பார்போம் . கண்டுபிடிப்பாளர்களையும் , அவர்களது கண்டுபிடிப்புகளையும் மறக்காமல் இருப்பது நாம் அவர்களுக்கு செய்யும் ஒரு மரியாதைதான் .
அன்புடன் ஷிவா




























































































posted by சிவதாசன் பூவை at 9:49 PM

0 Comments:

கருத்துரையிடுக

<< Home