தமிழ் புதையல்

திங்கள், 12 ஜனவரி, 2009

சத்யம் நிறுவனத்தை தொடர்ந்து விப்ரோ மற்றும் மெகாஸாஃப்ட் ஆகிய நிறுவனங்களுக்கு உலக வங்கி 4 வருடம் தடை


எது நடக்கக்கூடாது என்று இந்திய I.T துறையினர் கடந்த சில நாட்களாக நினைத்தார்களோ அது நடந்து விட்டது... சத்யம் நிறுவனத்தை தொடர்ந்து விப்ரோ மற்றும் மெகாஸாஃப்ட் ஆகிய நிறுவனங்களுக்கு உலக வங்கி 4 வருடம் தடை விதித்துள்ளது...


இந்த இரண்டு இந்திய கம்பனிகள் உலக வங்கி ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்த / கொடுக்க முயன்றதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி இன்று தெரிவித்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது... 


இன்னும் சத்யம் குழருபடியில் இருந்து மீளாத இந்திய I.T துறையினருக்கு இது இன்னொரு பெரிய அடியாக விழுந்திருக்கிறது...


இது குறித்து கருத்து தெரிவித்த விப்ரோ நிறுவனம் "இதனால் எங்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை" என்றது...


இந்த செய்தியை கேள்விபட்ட உடன் எதிர் பார்த்தது போலவே விப்ரோ மற்றும் மெகாஸாஃப்ட் பங்குகள் சரிவை சந்தித்தன...

posted by Madhu at 12:32 AM

0 Comments:

கருத்துரையிடுக

<< Home