சத்யம் நிறுவனர் திரு. ராமலிங்க ராஜு அவர்கள் செய்த செயல் இந்திய நாட்டின் மென்பொருள் துறையின் ஆணி வேரையே அசைத்து பார்த்து விட்டது என்பது உண்மையே ..
இந்த கோபத்தில் இன்போசிஸ் நிறுவனர் திரு. நாராயண மூர்த்தி அவர்கள் வெளியிடும் சில கருத்துக்கள் இந்திய நிறுவங்களின் செயல்பாடுகளை பாதிக்கவே செய்யும் என்றே என்ன தோன்றுகிறது.
திரு. நாராயண மூர்த்தி அவர்களும் அவரது நிறுவனமும் சத்யம் நிறுவனம் பற்றி வெளியிட்ட கருத்துக்கள் :
"We will not touch tainted company like Satyam: Narayana Murthy"
"We won't hire anybody from Satyam - Infosys "
சத்யம் நிறுவன ஊழியர்கள் திறமையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர அவர்கள் நிறுவனர் செய்த தவறுக்கு அவர்களை தீண்டதகாதவர்கள் போல பலித்து பேசுவது மிகவும் மோசமான ஒரு செயல் .
இது போன்ற கருத்துக்கள் ஒரு பாவமும் அறியாத சத்யம் நிறுவன ஊழியர்களை மிகவும் பாதிக்கும் என்பதை அறிவாரா , திரு. நாராயண மூர்த்தி அவர்கள் ?
இன்போசிஸ் நிறுவனத்தில் சிலவருடங்களுக்கு முன்னாள், பநீஸ் மூர்த்தி அவர்கள் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு , நீதி மன்றம் சென்று பின்னர் பிணையில் விடுவிக்க பட்ட நிகழ்வை திரு. நாராயண மூர்த்தி அவர்களுக்கும் அவரது குழுமத்திற்கும் நினைவுட்ட முடியுமா ?
0 Comments:
கருத்துரையிடுக
<< Home