தமிழ் புதையல்
புதன், 28 ஜனவரி, 2009
ஆஃப்லைனில் ஜிமெயில் மின்னஞ்சல் வசதி
மின்னஞ்சல்களை பெறவேண்டும் என்றாலோ, அனுப்ப வேண்டும் என்றாலோ அதற்கு இன்டர்நெட் இணைப்பு தேவை. இது விரைவில் அந்தக் காலம் ஆகப்போகிறது.
இன்டர்நெட் இணைப்பு இல்லாமலோ, ஜிமெயில் கணக்கை கொண்டு மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது பெறவோ முடியும் வசதி, பரிசோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூகுல் நிறுவனத்தின் ஜிமெயில் லேப்ஸ் இந்த வசதியை பரிசோதனை முயற்சியில்
ஜனவரி 27-ல் தொடங்கியிருப்பதாக ஜிமெயில் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிமெயில் கணக்கில் உள்நுழைந்து அதில் உள்ள செட்டிங்ஸ் உள் சென்று லேப்ஸ்-ஐ கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆப்லைன் வசதியை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு தெரிவு செய்த பின்னர் ஜிமெயில் உங்களது கணினியில் ஒரு கியர் மூலமாக ஜிமெயில் சர்வரில் இருந்து உங்களது மின்னஞ்சல் தகவல்களை உங்களது ஹார்ட் டிஸ்கில் பதிவு செய்து விடுகிறது.
இப்போது உங்களிடம் இன்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும் நீங்கள் கவலைப்படாமல் வழக்கம் போல் உங்களுடைய மின்னஞ்சல்களை படிக்கலாம், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், மின்னஞ்சல்களை அனுப்பலாம்.
ஆப்லைனில் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது அவை அவுட்பாக்சில் சேமிக்கப்பட்டு, ஜிமெயில் நெட்வொர்க் சர்வருடன் இணைப்பு கிடைக்கும்போது அவற்றை அனுப்பி விடுகிறது.
தற்போது கூகுல் நிறுவனத்தில் சிலர் பரிசோதனை அடிப்படையில் இந்த வசதியைப்
பயன்படுத்தி வருகின்றனர். ஆப்லைனில் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களை அனுப்பி, பெற்றுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த சில தினங்களில் யுஎஸ் அல்லது யுகே இங்கிலிஷ் பயன்படுத்தும் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த வசதியை பயன்படுத்தமுடியும்.
எனவே இன்டர்நெட் கனெக்ஷன் இல்லையே... எப்படி மெயில் செக் செய்வது இனி யாரும் கவலைப்படத் தேவையில்லை!
0 Comments:
கருத்துரையிடுக
<< Home