தமிழ் புதையல்

திங்கள், 15 ஜூன், 2009

அனுப்பிய மெயிலைத் திரும்பப் பெற!

ஜிமெயில், "Undo Send" என்ற ஒரு புதிய வசதியை அளிக்கிறது. அதாவது, நீங்கள் தவறுதலாக அனுப்பிய மெயிலை,  மெயில் பெறுபவர் இன்பாக்ஸிக்குச் செல்லாமலேயே தடுத்திடலாம்.  

மெயில் "Compose" செய்து, மின்னஞ்சலை அனுப்பிய பிறகு, Mail Send Successfully என்ற செய்தி வரும்.  நீங்கள் இந்த வசதியை activate செய்திருந்தால், மின்னஞ்சல், அனுப்பிய பிறகு, "Your Message has been send,Undo" என்ற இணைப்பு வரும்.  மின்னஞ்சல் திரும்பப் பெறுவதாயின், இந்த இணைப்பைச் சொடுக்கினால் போதும்.



இந்த சேவையை பயன்படுத்த,  ஜிமெயிலில் உள்நுழைந்து, "Labs" பக்கத்திற்குச் சென்று,  "Undo Send" சேவையைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்தவும்.  (ஜிமெயில் பக்கத்தில், மேலே வலது மூலையில்,  பயனர் பெயர், "Setting" இடையில்,  பச்சை  நிற குடுவை  ஒன்று இருக்கும்.  அதுவே, "Labs" பக்கத்திற்குச் செல்லும் இணைப்பாகும்.) 

மின்னஞ்சல்,  பெறுநர் இன்பாக்ஸிக்குச் சென்றுவிட்டால்,  அதை  திரும்பப் பெற இயலாது. 

posted by Madhu at 2:27 AM 0 comments