தமிழ் புதையல்

வியாழன், 26 மார்ச், 2009

சி.பி.ஐ (C.B.I) , ராணுவம் (Army) மற்றும் தமிழ்நாடு போலீஸ்.................

சி.பி.ஐ (C.B.I) , ராணுவம் (Army) மற்றும் தமிழ்நாடு போலீஸ் இந்த மூவரின் செயல்பாடுகள் எவ்வாறு வேறுபடும் என்று விளக்கும் ஒரு நகைச்சுவை பதிவு...


சி.பி.ஐ (C.B.I) , ராணுவம் (Army) மற்றும் தமிழ்நாடு போலீஸ், இந்த மூணு பேரும் நாங்க தான் திறமைசாலிகள் என்று ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டனர். இதை பார்த்த உள்துறை அமைச்சகம் "ஏலே! உங்களுக்கு ஒரு போட்டி வைக்கிறோம், அதுல யாரு ஜெயிக்கிரின்கலோ அவன் தான் பெரிய ஆலுனு" சொல்லிட்டாங்க.


போட்டி என்னனா ஒரு முயல கொண்டு போய் காட்டுல விட்டுறது... அத யாரு கரைட்டா கண்டுபிடிக்கிராங்கலோ அவிய்ங்க தான் ஜெயிச்சதா அர்த்தம்.


முதல்ல களத்துல இறங்குன சி.பி.ஐ, காடு பூரா உவாளிகள நிப்பாடிச்சி... அந்த உவாளிகள்ல முக்காவாசி பேரு சி.பி.ஐகிட்ட காசு வாங்கிகிட்டு முயலுக்கு உளவு சொல்லிகிட்டிருந்தனுங்க... மீதி கொஞ்சம் பேரு காட்டுக்கு உள்ளேயே போகாம வீட்டுல படுத்து தூங்கிட்டானுங்க... இதனால மூணு மாசமாகியும் முயல பிடிக்க முடியல. மூணு மாசம் கழிச்சு நம்ம சி.பி.ஐ மக்கள், உள்துறை அதிகாரிகள் கிட்ட "ஐயா நாங்க நல்ல தேடிட்டோம் இந்த காட்டுக்குள்ள முயலே இல்லைன்னு" அறிக்கை கொடுத்துட்டாங்க.


அடுத்து உள்ள இருங்குன ராணுவம்... போயி ஒரு ரெண்டு வாரம் கழிச்சு உருக்கொலைந்த நிலையில் ஒரு ஆடு, ஒரு ஆதிவாசி பொண்ணு, ஒரு மாசம் முன்னாடி செத்துப்போன முயலோட ஒரு காலு இவற்றுடன் வந்து "ஐயா! முயல் எங்களை தாக்க வந்துச்சி, நாங்க தற்காப்புக்காக சுட வேண்டியதா போச்சு... இந்த ஆடும், ஆதிவாசி பொன்னும் முயலோட கூட்டாளிகள். " அப்படின்னு ஒரு கத சொன்னாங்க...


கடைசியா களத்தில் குதிச்ச நம்ம தமிழ்நாடு போலீஸ் ஒரே வாரத்துல வெளிய வந்தாங்க... முகம், கை, கால் எல்லாம் வீங்கிய நிலையில் ஒரு கரடியோட...ஐயா கிட்ட உண்மைய சொல்லுன்னு ஓர் போலீஸ் சத்தம்போட கரடி சொல்லுச்சு.. "ஐயா உண்மைய ஒத்துக்குறேன்... நான் தான் முயலு... நான் தான் முயலு...."



posted by Madhu at 9:51 PM 0 comments

திங்கள், 23 மார்ச், 2009

VSoft ரேபிட்ஷேர் தரவிறக்கி

ரேபிட்ஷேர் (Rapidshare)எனப்படும் கோப்புப்பகிர்வான்(filesharing) தளத்தில் உலகமெங்கும் உள்ள பயனர்கள் (users) எண்ணற்ற கோப்புகளை (files)ஏற்றி வைத்துள்ளனர். ஏற்றப்பட்ட (uploaded) கோப்புகளின் சுட்டிகளை (links) பிறருக்குச் சொல்லிவிடுவார்கள். அந்தச் சுட்டி தெரிந்தவர்கள் இணையிறக்கிக் (download)கொள்ளலாம்.

இந்தக் கோப்புகளின் சுட்டியை ஏதேனும் ஒரு உலவியின் (browser) முகவரிப் பகுதியில் உள்ளிட்டால், இலவசப் பயனர்களுக்காக (free users) 30 முதல் 180 வினாடிகள் வரை காத்திருக்கச் சொல்லும். பின்பு அந்தக் குறிப்பிட்ட கோப்பினை தரவிறக்கம் / இணையிறக்கம் செய்ய அனுமதி கொடுக்கும்.

ஆனால் இலவசப் பயனர்களுக்கான நிபந்தனைகள் (restrictions) நிறைய இருக்கின்றன.

Rapidshare Downloader

Rapidshare Downloader

1) அவற்றுல் மிக முக்கியமான ஒன்று குறிப்பிட்ட வினாடிகள் வரை காத்திருத்தல் வேண்டும்.
2) ஒரே நேரத்தில் ஒரு கோப்பு மட்டும்தான் தரவிறக்க இயலும்.
3) ஒவ்வொரு கணினியின் ஐபி. முகவரியை (IP Address) ரேபிட்ஷேர் நினைவில் வைத்துக்கொண்டுதான் தரவிறக்க அனுமதி கொடுக்கிறது.
4)ஒரே ஐபி முகவரி வாயிலாக ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை இணையிறக்க அனுமதி அளிக்காது.
5)இதனால் நாம் மிகுந்த பொறுமையுடன் ஒன்றொன்றாக தரவிறக்கம் செய்ய வேண்டும்.

நம்மிடம் 10 சுட்டிகள் இருக்கின்றன. அனைத்தையும் இறக்கிவிட வேண்டும் எனில் ஒவ்வொன்றாகச் செய்தால் நிறைய நேரமிழப்பு நேரிடும்.ஆதலால் குறைந்த பட்சம் அடுத்தடுத்த கோப்புகளையாவது ஒரு Que வரிசையில் தொடர்ச்சியாக தரவிறக்கம் செய்ய அனுமதியளிக்கும் வகையில் உதவும் ஒரு மென்பொருளை இணையத்தில் கண்டேன்.

சிறப்பம்சங்கள் :

அனைத்து தரவிறக்கமும் முடிந்தவுடன் கணினியை அணைத்து அதன் இயக்கத்தை நிறுத்திவிட இயலும். (auto shutdown)

English , Farsi , French ஆகிய மூன்று மொழிகளுடன் ஏற்புடையதாக உள்ளது.

தரவிறக்கச் சுட்டி : http://www.vsoft.ir/files/RAD3.4.zip

குறிப்பு : மைக்ரோசாப்ட் டாட்நெட் 2.0 (Microsoft dotnet framework) வாயிலாக இந்த மென்பொருளின் நிரலை எழுதி இருக்கிறார்கள். ஆகவே இந்த மென்பொருளை நிறுவதற்கு முன்பாக டாட்நெட் 2.0 வை இறக்கம் செய்து நிறுவிவிடவேண்டும்

posted by Madhu at 11:28 PM 0 comments

வியாழன், 19 மார்ச், 2009

நூல் அறிமுகம்

எய்ட்ஸ்: ஓர் உயிரியல் ஆயுதப்போர்
மருத்துவர் வீ.புகழேந்தி.
வெளியீடு: சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு
225கி. நேரு தெரு, ஜீவா நகர்
புதுப்பட்டினம், காஞ்சிபுரம்-603 102
விலை ரூ. 8.

எய்ட்ஸ் அமெரிக்காவினால் திட்டமிட்டு பரப்பப்பட்ட நோய்

''Emerging Viruses: AIDS. Ebola; Nature, Accident or intentional�� என்கிற ஆய்வு நூலில் Dr.Leonard G.Horauiltz, எய்ட்ஸ் கிருமியின் உருவாக்கத்தில் பின்புலத்தில் இருந்தவர் முன்னாள் அமெரிக்க உள்துறை அமைச்சரான ஹென்றி கிஸ்சிங்கர் என்பதையும், மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், அமெரிக்கா தனது மேலாண்மையை நிறுவவும், 10 மில்லியன் டாலர்கள் அமெரிக்க அரசாங்கப் பணத்திலிருந்து அமெரிக்க ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் எழுதியுள்ளார்.

AIDS இந்த ரகசிய எய்ட்ஸ் கிருமி உருவாக்கும் திட்டத்திற்கு MkNAOMI எனப் பெயரிடப்பட்டது எனவும், (Negroes are only Momentary Intividuals NAOMI) இத்திட்டத்தின் முழுக்கட்டுப்பாடும் சி.ஐ.ஏ. துணையுடன் கிஸ்சிங்கர் மற்றும் சில விஞ்ஞானிகளின் கையில் இருந்ததையும் தெளிவாக எழுதியுள்ளார்.

'AIDS- An Explosion of the Biological time Bomb?�எனும் புத்தகத்தில் எய்ட்ஸ் கிருமிகள் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன என தெளிவுபடுத்தியுள்ளார்.

Cleveland எனும் செய்திப்பத்திரிகை எய்ட்ஸ் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட கிருமி என்பதற்கு ''அரசு பதிவேடுகளில் மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன.'' என செய்தி வெளியிட்டுள்ளது.

London Times பத்திரிகையானது பின் வருமாறு கூறுகிறது.

''உலக சுகாதார நிறுவனத்தின் திட்டமான பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் மூலம், பல மில்லியன் ஆப்பிரிக்க மக்களுக்கு எய்ட்ஸ் கிருமி கலந்த பெரியம்மை தடுப்பூசி கொடுத்ததன் காரணமாக எய்ட்ஸ் பரவியது. இத்தடுப்பூசிக்கு பின்னரே எய்ட்ஸ் நோய் அங்கு கொள்ளை நோயாக மாறி மக்களைப் பாதித்தது. (London Times மே 11, 1987)

1979ல் பென்டகன் மையத்தின் Dr. Mac Arthur என்பவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சோதனைச்சாலைகளில் உருவாக்கப்பட்ட எச்.ஐ.வி. வைரஸ் அமெரிக்காவில் வெறுக்கப்படும் சிறுபான்மையினரான ஓரினச் சேர்க்கையாளர்களிடத்து அவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் பரிசோதிக்கப்பட்டது. மஞ்சள் காமாலை தடுப்பூசி திட்டத்தின் மூலம் அவர்களுக்கு பரப்பப்பட்டது. அத்திட்டம் பரிசோதிக்கப்பட்ட Manhatten எனும் இடத்தில்தான் உலகில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் அதிகம் இருந்தார்கள் என தெரியவந்தது.

Dr. William Cambell Douglass என்பவர் தனது Who Murdered Africa எனும் அறிக்கையில் அரசின் வேண்டுகோளுக்கிணங்க எய்ட்ஸ் கிருமி 1974ல் சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்டது என்பதையும், ஆப்பிரிக்காவில் பெரியம்மை தடுப்பூசியில் தெரிந்தே இக்கிருமி கலக்கப்பட்டதே ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் பரவக் காரணம் என்பதை விளக்கியுள்ளார்.

2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கென்யா பெண்மணி ''வங்காரி மாத்தாய்'' பின்வருமாறு கூறுகிறார்:

''உண்மையைச் சொன்னால் உயிரியல் ஆயுதப் போருக்காக சில விஞ்ஞானிகளால் சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் எய்ட்ஸ் வைரஸ். இதன் மூலம் வளர்ச்சியடைந்த நாடுகள் உயிரியல் போர் முறையைத்தான் இனி பயன்படுத்துவார்கள். இனி துப்பாக்கிகள் கற்கால மக்களுக்கு மட்டுமே என்பதை நாங்கள் அறிவோம்''

யார் எய்ட்ஸ் கிருமியை திட்டமிட்டு உருவாக்கி பரப்பினார்களோ அவர்களே அதற்கு சிகிச்சையளிக்க மருந்துகளும் கண்டுபிடித்து அதன் மூலம் கொழுத்த இலாபத்தையும் பெற்று வருகிறார்கள்.

1986ல் சோவியத் நாடு, எய்ட்ஸ் வைரஸ் அமெரிக்க உயிரியல் போர்முறை வளாகத்தில் உருவாக்கப்பட்ட கிருமி என செய்தி வெளியிட்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது உடனே 'பொய்ப் பிரச்சாரம்' என மறுப்புச் செய்திகள் வந்தன. இரஷ்ய நாட்டு விஞ்ஞானிகளும் அத்தகைய உயிரியல் உத்திகளில் ஈடுபட்டதாலும், அமெரிக்க கிருமி உருவாக்கத்தில் இரஷ்ய விஞ்ஞானிகளுக்கும் பங்குண்டு என்பதாலும், அக்குற்றச்சாட்டை ரஷ்யா பின்னர் எழுப்பவில்லை.

மேற்கண்ட தகவல்களோடு மேலும் பல விளக்கங்களைக் கொண்டு 24 பக்க சின்னஞ்சிறு நூல் பல அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளரிடம் மஞ்சள் காமாலை தடுப்பூசி மூலமும், ஆப்ரிக்காவில் பல மில்லியன் அப்பாவி மக்களிடம் பெரியம்மை தடுப்பூசி மூலமும் பரிசோதிக்கப்பட்டது எய்ட்ஸ் என்பதை அறியும்போது நம் நாட்டில் ''யார் யாரோ வாரி வழங்கும்'' தடுப்பூசிகளை பயன்படுத்துவது நமக்கு பயமேற்படுத்துகிறது.

டாக்டர் புகழேந்தியின் இந்நூல் ஆய்வுக்குரியது. அவரது உழைப்பு பாராட்டுக்குரியது.


posted by Madhu at 5:35 AM 0 comments

வெள்ளி, 13 மார்ச், 2009

எந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வைக்க ஒரு வித்தை!...

உங்கள் ஹார்ட் டிஸ்க் NTFS ஆக இருந்தால் இது சாத்தியமாகும். FAT32 வில் இந்த வித்தை பலிக்காது.

உதாரணமாக Solitaire பைலை (Sol.exe) ஒரு டெக்ஸ்ட் (Text) பைலுக்குள் மறைத்து வைக்க என்ன செய்ய வேண்டும்...

நீங்கள் 'C' ட்ரைவை உபயோகிப்பதாக வைத்துக்கொள்வோம்.

1. 'TEST' என்ற போல்டரை உருவாக்கவும்.(C:\TEST) எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.

2. அந்த போல்டருக்குள் ஒரு டெக்ஸ்ட் பைலை (Text Document) உருவாக்கி, அதனுள் ஏதாவது டைப் செய்து விட்டு அந்த பைலுக்கு container.txt என பெயரிட்டு சேமித்து கொள்ளவும். (இந்த டெக்ஸ்ட் பைலுக்குள் தான் Sol.exe பைலை மறைத்து வைக்க போகிறோம்)

3. \windows\system32 என்ற போல்டரிலிருந்து sol.exe பைலை C:\TEST க்கு காப்பி செய்யவும்.

4. இப்பொழுது Command Window ஐ திறந்து கொண்டு, C:\TEST போல்டருக்கு சென்று "Type Sol.exe > container.txt:sol.exe" இதை டைப் செய்து என்டர் அடிக்கவும்.

5. திரையில் எந்த மாற்றமும் தெரியாது. அந்த டெக்ஸ்ட் பைலின் அளவு + .Sol.exe பைலின் அளவு 50 கேபி ஆகியிருக்கும். அந்த டெக்ஸ்ட் பைலை திறந்து பார்த்தால், நீங்கள் முன்பு டைப் செய்திருந்த அனைத்தும் அப்படியே இருக்கும்.

6. நீங்கள் C:\TEST. போல்டரில் காப்பி செய்த Sol.exe பைலை அழித்துவிடவும்.

7. இப்பொழுது மறைத்து வைத்த ஃபைலை எப்படி திறப்பது? கீழ்கண்ட கட்டளையை கொடுக்கவும்.

"start c:\test\container.txt:sol.exe"

அவ்ளோதான்.

இப்படி எந்த வகை பைலையும், இன்னொரு எந்த வகை பைலுக்குள்ளும் மறைத்து வைக்கலாம். (உங்கள் ஹார்ட் டிஸ்க் NTFS ஆக இருக்கும் பட்சத்தில்..)

குறிப்பு:- நீங்கள் மறைத்து வைக்கும்
பைலின் பெயரை மறந்துவிட்டால் சிரமம்.
posted by Madhu at 11:00 AM 0 comments

வியாழன், 12 மார்ச், 2009

ஈழக்குறிப்புகள் : பத்திரிகை தர்மம் -- என். ராமும் லசந்த விக்கிரமதுங்கவும்

தி சண்டே லீடரில் வெளிவந்த லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி ஆசிரியத் தலையங்கத்தின் தமிழ் வடிவம் இங்கே. ஜனவரி 8, 2009 அன்று காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். என்று, எவ்வாறு நிகழும் என்பதை மாத்திரம்தான் லசிந்தவால் முன்கூட்டியே ஊகிக்கமுடியவில்லை. மற்றபடி, தன் மரணத்தை அவர் எதிர்பார்த்திருந்தார். நிச்சயம் அரசாங்கம்தான் பொறுப்பாளி என்று தெளிவாக எழுதியும் வைத்திருந்தார்.


ராஜபக்ஷேவை மகிந்த என்று அழைக்கும் வெகு சிலரில் ஒருவர் லசந்த விக்கிரமதுங்க. ராஜபக்ஷேவின் ஆட்சியை தீவிரமாக விமரிசனம் செய்து அவர் ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களுள் முதன்மையானவரும் அவரேதான். பெரும்பான்மையினரின் பார்வையை பதிவு செய்கிறோம் என்னும் பெயரில் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைலைகளை லசிந்த விக்கிரமதுங்க நியாயப்படுத்தவில்லை. நம் நண்பர்தானே என்பதற்காக கண்டும் காணாமலும் இருந்துவிடவில்லை. புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான போரில் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவித் தமிழர்கள்தான் என்பதை அழுத்தமாகப் பலமுறை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ராஜபக்ஷேவை கடுமையாகக் கண்டித்தும் இருக்கிறார். மிரட்டல்கள், அடிதடிகள், தாக்குதல்கள் எதுவும் அவரைத் தடுத்துநிறுத்திவிடவில்லை. எனவே கொல்லப்பட்டார்.

லசந்த விக்கிரமதுங்க விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர். ராஜபக்ஷேவை விமரிசனம் செய்ததைப் போலவே புலிகளையும் அவர் விமரிசனம் செய்திருக்கிறார். நான் எடிட்டர், நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்கவேண்டும் என்று தன்னுடன் பணிபுரிபவர்களை லசிந்த என்றும் அடக்கி ஆட்கொண்டது கிடையாது. பத்திரிகையாளர்கள் உண்மையை பயமின்றி எடுத்துக்கூறவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை. தி சண்டே லீடர் செய்தியாளர்களுக்கு அளவற்ற சுதந்தரத்தை அவர் அளித்திருந்தார். 

லசிந்த விக்கிரமதுங்கவைப் போலவே என். ராமும் ஒரு எடிட்டர். இந்தியாவின் தேசியப் பத்திரிகையாகத் தன்னைப் பிரகடனம் செய்துகொள்ளும் தி ஹிந்துவின் எடிட்டர் இன் சீஃப். என். ராமும் புலிகள் எதிர்ப்பாளர். ஆனால், என்றாவது லசிந்தவைப் போல் நாணயத்தின் இரு பக்கங்களை அவர் பார்த்திருக்கிறாரா? இலங்கை அரசாங்க சார்பு செய்திகள் தவிர்த்து வேறொன்றை அவர் இதுவரை பதிப்பித்திருக்கிறாரா? இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து ஒரு சிறிய பெட்டிச் செய்தியையாவது தி ஹிந்துவில் யாரேனும் கண்டதுண்டா? 

இது தேசிய அவமானம் என்பதாக மங்களுர் பப் விவகாரம் பற்றி நீட்டியும் முழக்கியும் தலையங்கம் எழுதிய தி ஹிந்து இலங்கை ராணுவத்துக்கு இந்தியா அளிக்கும் தார்மீக ஆதவை என்றாவது சுட்டிக்காட்டி சாடியிருக்கிறதா? இலங்கை ராணுவம் போரில் சிறு முன்னேற்றம் கண்டாலும் ஆஹா வீழ்ந்தது முல்லைத்தீவு, அடுத்து கிளிநொச்சிதான் என்று கிளர்ச்சியுடன் எழுதிக்கொண்டு போகிறது தி ஹிந்து. புலிகள் இத்தோடு ஒழிந்தார்கள், இனி அவ்வளவுதான் என்று வாரத்துக்கு இருமுறையாவது செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. 

லெட்டர்ஸ் டு தி எடிட்டர் பகுதியிலும் கடுமையான தணிக்கை. இருபது கடிதங்கள் வெளியானால் அதில் பத்தொன்பது தி ஹிந்துவை ஆதரித்து வந்திருக்கும். ஸார், மிகவும் சரியாகச் சொன்னீர்கள். புலிகள் ஒழிக்கப்படவேண்டியவர்கள். புலிகள் ஆயுதம் ஏந்துவதால்தான் இத்தனை பிரச்னையும். ராஜபக்ஷே அப்பழுக்கற்ற தியாகி. அவர் அளிக்கும் வாய்ப்புகளை புலிகள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. தமிழகத்தில் உள்ள கட்சிகள் புலிகளிடம் பேசி, ஆயுதங்களை துறக்கச் செய்யவேண்டும். மற்றபடி, தனி ஈழம் அமையும் என்று சொல்வதற்கில்லை. 

சிறிதும் சளைக்காமல், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ராஜபக்ஷேவிடம் பேசி ஏதாவது மேட்டர் வாங்கி முதல் பக்கத்தில் போட்டுவிடுகிறார் என். ராம். தமிழர்களை நான் அவசியம் பாதுகாப்பேன். இந்தியா இனி அவர்களைப் பற்றி கவலைப்படவேண்டிய அவசியமில்லை. உங்கள் எல்லோரையும்விட தமிழர்கள் மீது எனக்கு அளவுகடந்த பாசமும் நேசமும் உண்டு. எங்கள் எதிரி விடுதலைப் புலிகள். அவர்கள் மீது மட்டும்தான் நாங்கள் யுத்தம் தொடுத்துக்கொண்டிருக்கிறோம். இடையில் எப்போதாவது, பை மிஸ்டேக் சில சிவிலியன்கள் சிக்கிக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். 

என். ராமின் பத்திரிகை தர்மத்துக்கும் லசந்த விக்கிரமதுங்கவின் பத்திரிகை தர்மத்துக்கும் ஏன் இத்தனை பெரிய வித்தியாசம்? அதற்கான காரணத்தை லசந்தவே சொல்லியிருக்கிறார். 'உயர்பதவி, புகழ், பொருள், பாதுகாப்பு அனைத்துக்கும் மேலாக ஒரு அழைப்பு இருக்கிறது. அதுதான் மனச்சாட்சி.' லசிந்த தன் மனச்சாட்சியின் அழைப்பை இறுதிவரை நிராகரிக்கவி்ல்லை.

Thanks to: http://marudhang.blogspot.com
posted by Madhu at 12:47 AM 0 comments

செவ்வாய், 10 மார்ச், 2009

ஜெயலலலிதா: ஈழத்தின் வில்லி நாயகியா?

நாடாளுமன்றத் தேர்தல் வந்ததும் ஈழத்திற்கு தனி மவுசு ! பேசுவதற்கும், நடிப்பதற்கும், உணர்ச்சிகளை அள்ளி வீசுவதற்கும் வேறு எதுவும் இல்லையென்பதால் ஓட்டுக் கட்சிகள் எடுத்திருக்கும் ஆயுதம் ஈழப்போராட்டம்.

 

ஈழப் போராட்டம் தொடர்பாக தமிழ்நாட்டில் உண்மையாகப் போராடும் புரட்சிகர அமைப்புகள், தமிழின இயக்கங்கள், போராடுவது போல காட்டிக் கொள்ளும் சமரச சக்திகள், துரோகிகள், எல்லாரும் உண்டு. ஆனால் ஈழத்தின் மூச்சு நெறிக்கப்படவேண்டுமென துடிக்கும் எதிரிகளே தமது கொடூரக் கைகளால் ஈழத்தை கட்டியணைக்கும் கொடுமையை என்னவென்று சொல்ல?

 

jayalalitha-big

(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

 

போரென்றால் மக்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள், புலிகளை ஒடுக்கவேண்டும், சீமான், திருமாவளவனைக் கைது செய்யவேண்டும், புலி ஆதரவாளரான கருணாநிதியின் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றெல்லாம் ஊளையிட்ட ஜெயலலிதா என்ற கோட்டான் ஈழத்தின் மீதான போர் நிறுத்தப் படவேண்டுமென எட்டுமணிநேரம் உண்ணாவிரதம் இருந்து உலகத்தையே வியக்க வைத்திருக்கிறதாம். இரண்டு தடவைகள் தமிழகத்தை ஆண்டு ஒட்டச்சுரண்டி பல ஆயிரம் கோடி கொள்ளையடித்த ஜெயா சசி கும்பல் தனிப்பட்ட முறையில் ஐந்து இலட்சமும், கட்சி சார்பாக ஒரு கோடியும் ஈழத்து மக்களுக்காக பிச்சையிடுகிறதாம். இந்த கலெக்ஷன் கல்லா செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக கொடுக்கப்படுமாம்.

ஏற்கனவே முல்லைத்தீவிலும், வன்னியிலும் செஞ்சிலுவைச் சங்கத்தை சிங்கள அரசு விரட்டிவிட்டது. இனி அம்மா கொடுத்தபணத்தை வைத்து செஞ்சிலுவைச் சங்கம் என்ன செய்யும்? செத்து மடியும் மக்களின் ஈமச்சடங்கு செய்வதற்குத்தான் அந்தப் பணம் பயன்படும். ஈழத்தின் கருமாதிச் செலவுக்கு புரட்சித்தலைவி ஸ்பான்சர்! அதற்கு ஜெயா டி.வி லைவ் டெலிகாஸ்ட்!

அப்புறம் இந்த உண்ணாவிரத நாடகத்தில் பேசிய புரட்சித் தலைவி இலங்கையின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு, இறையாண்மை கெடாமல் ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும், இதைவிடுத்து திசைமாறிய ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்றெல்லாம் உளறியிருக்கிறார். இதைத்தானே ராஜபக்சேவும் பேசி இலங்கையின் இறையாண்மைக்கு எதிரான பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்குத்தான் போர் என்று ஈழத் தமிழர்களை கொன்று குவித்து அமல்படுத்தி வருகிறார். இந்திய அரசும் இந்த இறையாண்மை புனிதத்தை வைத்துத்தான் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவுகிறது. தற்போது மருத்துவக்குழுவை அனுப்பி அடிபட்ட இலங்கை ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப் போகிறதாம். ஒரே நடவடிக்கை, ஒரே பேச்சு, ஒரே கருத்து இருவேறு பொருள்களில் பேசமுடியுமென்றால் ஈழத் தமிழர்கள் செய்த பாவம்தான் என்ன? ஒருவேளை இப்படியிருக்கலாமோ? ஈழத்தமிழ் மக்களை கொல்வது ராஜபக்சேவின் பணி, கருமாதி காரியம் செய்வது ஜெயலலிதாவின் பணி?

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமான் கைது செய்யப்பட்டது போல அதே கருத்துக்ளை வைத்திருக்கும் கருணாநிதியும் கைது செய்யப்படவேண்டுமென புரட்சித் தலைவி முழங்கிய போது அருகில் இருந்த புரட்சிப் புயல் வைகோ நெளிந்தார். நல்லவேளையாக அந்தப் பட்டியலில் வைகோவைச் சேர்க்காமல் அருள்பாலித்தார் அம்மா.

ஈழத்தின் கருமாதிக்கான உண்டியலில் ஐந்து இலட்சத்தைப் போட்ட வைகோ, அம்மாவின் உண்ணாவிரதத்தை பழச்சாறு கொடுத்து முடித்துவைக்கும் பேறு கிடைத்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொண்டார். ஈழத்திற்கு துரோகம் செய்ததாக கருணாநிதியைத் திட்டிய வாய் கூச்சநாச்சமின்றி ஈழத்தமிழர்களின் வில்லியை மனதாரப் பாராட்டிய காட்சிக்கு இணையான ஆபாசம் இந்த உலகில் எதுவுமில்லை.

அடுத்த ஆபாசம் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன். இந்த உலகில் யாரும் செய்யமுடியாத இந்த எட்டுமணிநேர உண்ணாவிரதத்தை செய்யத் துணிந்த அம்மாவின் தியாகத்தை வாய்வலிக்கப் பாராட்டிய அவர் இந்தப் போராட்டத்தைப்பார்த்து உலகெங்கும் சிதறிக் கிடக்கும் ஈழத் தமிழ் மக்கள் தமழிகமே தம் பக்கம் அணிவகுத்து நிற்கிறது என மகிழ்ச்சியடைந்து நிம்மதி அடைந்திருக்கிறார்களாம். எல்லாம் ஈழத்தமிழன் இளிச்சவாயன் என்ற நம்பிக்கையில் தா.பாண்டியன் வைத்திருக்கும் துணிச்சல்தான்.

அம்மா அளவுக்குக்கூட ஈழத்தின் போராட்டத்திற்காக எதுவும் பேசாத இடது கம்யூனிஸ்ட் கட்சியின் என்.வரதராஜன் இலங்கையின் இறையாண்மைக்கு எந்த குந்தகமும் வராமல் வெகு ஜாக்கிரதையாக ஒரு விளங்காத அறிக்கையை விளக்கெண்ணை போல அதுவும் எழுதி வைத்துப் படித்தார். எல்லாம் அம்மாவின் தயவில் இரண்டு சீட்டுக்களைப் பெற்று வெற்றிபெறவேண்டும் என்ற அடிமைத்தனம்தான்.

அதற்கப்புறம் தலித் மக்களுக்கு புதிய தமிழகத்தின் கிருஷ்ணசாமி, குடியரசுக் கட்சியின் வை.பாலசுந்தரம், முசுலீம்களுக்கு லீக் பிரதிநிதிகள், தேவர் சங்க நாட்டாமைகள் எல்லாரும் புரட்சித் தலைவின் உற்சவ உலாவிற்கு மந்திரம் ஓதி புண்ணியம் செய்தார்கள்.

மற்றபடி உண்ணாவிரதத்திற்கு வரவில்லையென்றாலும் அம்மா இந்த அளவிற்கு இறங்கி வந்து சேப்பாக்கத்தில் குந்தியிருந்ததற்கு நன்றி தெரிவித்து உருகியவர்களில் திருமாவளவனும், பழ.நெடுமாறனும், மருத்துவர் ராமதாஸூம் அடக்கம். வில்லியை வில்லி என்று கூட சொல்லமுடியாத அந்த துரதிர்ஷடசாலிகளை உண்மையில் வழிநடத்திய விசயமென்னவென்றால் இன்னமும் நாடாளுமன்றத்திற்கான கூட்டணி சேர்க்கைகள் முற்றுப் பெறாமல் இருப்பதுதான். டெல்லியின் அதிகாரமையத்திற்கான ஆட்டத்தில் முல்லைத் தீவின் மரண ஓலம் கேட்குமா என்ன?

இதெல்லாவற்றையம் விட கொடுமையான விசயம் என்னவென்றால் அம்மாவின் உண்ணாவிரதத்தைப் பாராட்டி சுப்பிரமணிய சாமி அறிக்கை விட்டதுதான். இனி புரட்சித் தலைவியைப் பாராட்டவேண்டியதில் விடுபட்ட தலைவர் ராஜபக்சே மட்டும்தான். அவரையும் ஒரு அறிக்கை விடுமாறு இந்து ராம் கேட்டுக் கொண்டால் இந்த நாடகம் நேர்த்தியாக முடிக்கப்படும்.


posted by Madhu at 9:19 PM 0 comments

திங்கள், 9 மார்ச், 2009

நான் கடவுள்-சினிமா அகோரியும் ரியல் அத்வானிக்களும்

சுமார் மூன்றாண்டுகளாக இழுத்து இழுத்து கடைசியாக பிணந்தின்னிகளின் கோவணத்தை காட்டாது மாடர்ன் உலகத்திலே ஜட்டியை மாட்டி விட்டு  "அட நம்புங்கப்பா இவன் நொம்ப நல்லவன் ,அவன் என்ன பண்ணுனான் இந்த உலகத்த விட அவனுக்கு கடவுள் உலகம்தான் புடிச்சிருக்கு"  என்கிறார் பாலா.இனி கதைக்குள் செல்வோம்.

 

 

kadavul-low

 

 

தொடர்ந்து தன் வீட்டில் பல பேர் செத்து போவதால் ஜோசியக்காரனிடம் போய் குறி கேட்கிறார் ஒருவர்.அதற்கு அந்த ஜோசியனோ உன் பையன் தான் இதற்கு காரணம். அவனை விட்டு பிரிந்து வாழ்வது மட்டுமே இதற்கு தீர்வு என்கிறார்.உடனே தன் மகனை காசியில் கொண்டு போய் விட்டு விட்டு பல ஆண்டுகளுக்குப்பின்  மகனை பார்க்க திரும்புகிறார்.வந்தவருக்கோ மிக்க அதிர்ச்சி தன் மகன் அகோரியாகி இருக்கிறான்.அவனின் குருவிடம் கெஞ்சி கூத்தாடி தன் ஊருக்கே அழைத்து வருகிறான்.

 

குருவோ அகோரிக்கு சொந்தம் பந்தம் இருக்க கூடாது நீபோய்விட்டு ஏதும் இல்லாது வா என்க .எல்லாவற்றையும் இல்லாததாக்குவதற்கு அப்பனுடன் செல்கிறான்  ருத்ரன் அகோரி.

 

யார் அகோரி : இவர்கள் முற்று துறந்தவர்கள்,முக்காலமும் அறிந்தவர்கள்,ஒருவருக்கு மோட்சம் கிடைக்க வேண்டுமா இல்லையா என்பதையா என்பதை இவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அதே போல் ஒருவரை பார்த்த வுடனே அவனின் கர்ம பாவங்களை அறிந்து விடுவார்கள்,தேவையெனில் தீர்ப்பும் வழங்குவார்கள்

 

தன் வீட்டுக்கு வரும் அகோரி ருத்ரன் எதுவுமே சாப்பிடாது கஞ்சா குடித்த படி வீட்டில் உள்ளவர்களை ஆபாசமாக திட்டிகொண்டும் இருக்கின்றான்.ஆத்தாளிடம் சன்டை போட்டுக்கொண்டு தான் சுயம்பு எனக்கூறிக்கொண்டு கஞ்சா இருக்கும் மலைதேடி சென்று அங்கே குடிகொள்கிறான்,மற்ற சாமியார்களெல்லாம் கஞ்சா அடித்து விட்டு படித்து விட இவன் மட்டும் கஞ்சா அடித்து தியானம் செய்து கொண்டிருக்கின்றான்.இங்கு இயக்குனர் சொல்லுகிறார் ஒரு தத்துவத்தை கஞ்சா போதைப்பொருளல்ல அது கடவுளை வழிபடுவதற்கான ஒரு வழி,அவ்வழியை மற்றவர்கள் பயன் படுத்துவதுகுற்றமென்றாலும் சாமியார்கள் பயன்படுத்துவது குற்றமாகாது.ஏனினில்  ஒரு தவறு உலக நன்மைக்காக பயன் படுத்தும் போது அது குற்றமாகாது.

 

இதோடு பிச்சைக்காரர்காளாக்கப்பாட்ட உடல் ஊனமுற்றோர்  வாழ்வின் கொடுமையும் சேர்கிறது ஆனால் அவர்களின் இன்னல்களோடு இருந்தாலும் மகிழ்ச்சியாகவே இருப்பதாகவே சித்தரிக்கப்படுகின்றது,ஆனால் கண்தெரியாத பெண் கடத்தி கொண்டுவரப்ப்ட்டதுமே நிலமை மேலும் சீரியசாகிறது,ஊனமுற்றோரை தன் கட்டுப்பாட்டில் வைத்தி  இருக்கும் தாண்டவனுக்கு இந்த கண் தெரியாத பெண்ணை பாலியல் தொழிலுக்கு அனுப்ப மாமாஒருவன் ஆலோசனை கூற  அப்பெண்ணை தூக்கி கொண்டுபோவதற்காக மாமா வருகிறார் பிறகு வேறென்ன  நம்ம ரஜினி படம் போலவே கதானாயகி கற்புக்கு எவ்வித பாதிப்பும் வராது  ருத்ரன் காப்பாறுகிறான் .

 

ஒரு பத்து பேரை அடித்து விட்டு வெளியே வரும் ருத்ரன் அந்த விபச்சார புரோக்கரை பாத்தவுடனே தன்னுடைய முக்கால அறிவால் அவன் தீய சக்தி என்பதை அறிந்து மக்கள் முன்னிலையில் அடித்து கொன்றுவிடுகிறான்.தக்க சாட்சி இல்லாதால் வழக்காடுமன்றன் அவனை விடுவிக்கிறது.

 

மீண்டும் கதாநாயகிக்கு தாண்டவன் மூலம் மண்டை உடைக்கப்பட்டு கைகால்கள் நொறுக்கப்படுகின்றது. கதானாயகி தவழ்ந்து   தவழ்ந்து  மலை மீது வந்து அகோரி ருத்ரனிடம் கேட்கிறாள் "சாமி என்ன கொன்னுடுங்க எங்களால இந்த வாழ்க்கய வாழ முடியல என்ன விபச்சாரியாக்கி விடுவாங்க" இந்து தர்மத்தின் படி ஒரு பெண் கற்பை இழந்து வாழ்வதை விட சாவது தான் உசித மானது என்பதனால்  அகோரி கதாநாயகிக்கு மோட்சம் கொடுத்து விட்டு காசிக்கு செல்கிறார்.


********


படம் இவ்வளவுதான் "நான்கடவுள்"  இது கடவுள் சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என்பதால்  கொஞ்சம் லேட்டாகவே அகோரி உட்பட அனைவரின் பாத்திரமும் புரிகிறது.அப்புறம் தான் விளங்கியது  எவனோ ஒருவன்,ரஜினி விஜய் மசாலா பாணியில் இது ஒரு ஆன்மீகப்படம்.கதானாயகியின் சேயையை தொட்டல் பறந்து பறந்து கதானாயகன் அடிப்பான் இங்கேயும் மெய்யாலும் தாவிதாவி அடிக்கிறான்.அங்கேயும் கற்பு காக்கப்படுகிறது,இங்கேயும் கற்புகாக்கப்படுகிறது.


அந்த கதாநாயகன் தம் கொஞ்சம் தண்ணீ,இவனோ எப்போதும் கஞ்சா என்ன இருந்தாலும் ரெண்டு பேரு கற்ப காப்பாத்திட்டாங்கல்ல.கல்கி பகவான் லோகத்த காக்க வந்துட்டார்.


ஆனால் உண்மையில் அகோரி எனப்படும் காட்டுமிரண்டிகளின் வாழ்வு முக்திமட்டும் தருவதல்ல,அவர்களின் வேலையே பிணத்தை எரிப்பது காசு வாங்கிகொண்டு அப்பிணம் சொர்க்கத்துக்காக  செல்ல விசா வங்கிதருவது தான்,பிணத்தை எரித்தவுடன் அந்த மண்ட ஓட்டினை உடைத்து அதையே தட்ட்டாக்கி வைத்து சாப்பிடுவார்கல்.பிணத்தின் சாம்பலை உடலெங்கும் பூசிக்கொண்டு அம்மணமாய் திரிவார்கள்.

 

அப்புறம் தான் முக்கிய வேலையையே தொடங்கும் ஆத்தங்கரையோரத்தி தியானம் செய்த படி காத்திருப்பார்கள். எதாவது பிணம் புனித கங்கையில் மிதந்து வருமல்லவா அதை எடுத்து தக்க மந்திரங்கள் செய்து  புனிதமாக்கி எந்த பகுதி யாருக்கு வேண்டுமோ அவர்கள் வெட்டி தின்னுவார்கள்.சிலர் அதை தீயில் சுட்டும் தின்கிறார்கள்,

 

அப்படிதின்னும் பிணந்தின்னிகளின் ஒருவன் சொல்லுகிறான் "எனக்கு கோழிக்கும் மனிதனுக்கும் வித்யாசம் தெரியவில்லை" இந்த அகோரிகளின் வேலையைத்தான் பாசக ஆர் எஸ் எஸ் கும்பல் நாடெங்கும் செய்து கொண்டு வருகிறது,முசுலீம்களின் உடல்களை வெட்டித்தள்ளியது.இந்த அக்கோரிகள் தான் பாபர் மசூதி இடிப்பின் போதும் படைபடையாய் முன்னணியில் நின்றார்கள்,ராம ராஜ்யத்தில் பிணந்திண்ணிகளுக்காக தனித்துரை ஏற்படுத்தப்படலாம்,பிணங்கள் கிடைக்காத பட்சத்தில் முசுலீம்கள் கிறித்துவர்கள் பின்ன தாழ்த்தப்பட்டவர்கள் பிணமாக்கப்பட்டு அந்த மோட்சம் தரும் புண்ணியவாண்களுக்கு புசிக்கதரப்படலாம்.

 

இது மிகையான கூற்று அல்ல.இந்த 2009 ஆண்டில் மனிதனை அந்தப்பிணத்தை தின்னும் ஒரு க்கூட்டம் உண்டெனில் அது இந்தியாவில் இந்த அகோரிகள் தான் .இப்படி வெட்ட வெளிச்சமாய் பிணத்தை தின்னும் மிருகங்களை கைது செய்து முட்டியை பெயர்க்காது சுட்டுக்கொள்ளாமல் சாமி சாமி என்று புனிதம் என்று போற்றி வருகின்றனர்.இப்படி ஒரு பிணந்திண்ணிகளின் கட்சியான பாசகவோ ஏனைய மற்ற கட்சிகளோ இதை கண்டு கொள்வதில்லை,காரணம் மதம்.மக்களின் மத உணர்வுகளில் யாரும் தலையிடக்கூடாதுகடைந்தெடுத்த பிழைப்புவாதிகள் எல்லோரும் சொல்லு கின்றனர்.

 

மதம் ஒரு அபின் என்றார் ஆசான் மார்க்ஸ்.அது எவ்வளவு உண்மை.செத்துப்போன பிணத்தை குறிப்பிட்ட நாளுக்கு மேல் வீட்டில் வைத்திருந்தால்  கைது செய்யும் போலீசு,பிணந்தின்னிகளை ஒன்று செய்வதில்லை,ஒன்று செய்யாது,ஏன் பலரும் இதை எல்லாம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. போராடும் மக்களுக்கெதிராக தூக்கப்படும் லத்திக்கம்புகள் பிணந்திண்ணிகளுக்கு கால் துடைக்கக்கூட பயன் படுவதில்லை என்பது தான் உண்மை.

 

இப்போது சொல்லுங்கள் மார்க்ஸ் சொன்னாரே மதம் ஒரு அபின் அது எத்துணை உணமை.

 

குறிப்பு


இது இந்துத்துவ பிரச்சாரப்படம்தான் ,கடவுளை கெட்ட வார்த்தையில் திட்டுவதாக காட்டுவதெல்லாம் ஆபாச நாயகன் செயமோகனுக்கு கைவந்த கலை.அவரால் தனிமனிதனை ஆபாசமாக வர்ணிக்கும் போதுதான்  அவருக்கு மோட்சம் கிட்டுமோ  என்னவோ? யாருக்க தெரியம் ஒருவெளை அந்த அகோரிக்கு தெரிந்தாலும் தெரியலாம்.


மேலும் கீழே  உள்ள சுட்டி மூல வீடியோ காட்சிகளை காணத்த்வறாதீரகள்.

http://www.youtube.com/watch?v=44r6McYybvI


posted by Madhu at 9:27 PM 0 comments